Last Updated : 22 Feb, 2017 09:43 AM

 

Published : 22 Feb 2017 09:43 AM
Last Updated : 22 Feb 2017 09:43 AM

இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிராக களம் இறங்கி போராடும் இயற்கை ஆர்வலர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு இயற்கை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 ஆயிரம் அடியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடியில் எரிபொருள் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய அளவில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஒப்பந்தம் மூலம் எண்ணெய் நிறுவனங் களை மத்திய அரசு தேர்வு செய் துள்ளது. அந் நிறுவனங்களுக்கு பிப்.15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அந்த 31 இடங்களில் ஒன்றுதான் நெடுவாசல்.

தடை விதிக்க மனு

மறுநாளே இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென நெடு வாசலில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கடந்த பிப்.17-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுக்கோட்டை ஆட்சியரைச் சந் தித்து, திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மனு அளித்தனர்.

நெடுவாசல் மற்றும் அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதி களில் இருந்து சென்னையில் தங்கி பணிபுரியும் நபர்கள் சார்பில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஜிபி அரங்கில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.

நெடுவாசலில் இயற்கை எரி வாயுவை எடுக்க தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக் கோட்டை திலகர் திடலில் பிப்.26-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

அமைப்புகள் ஆதரவு

இந்தப் போராட்டத்துக்கு பல் வேறு அரசியல் கட்சிகள், 25-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்தக் குழு வின் நிர்வாகி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் ஆலங்குடி யில் இன்று (பிப்.22) ஆலோ சனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அந்தக் குழுவின் மாவட்ட அமைப்புச் செயலாளர் என்.துரைராஜ் தெரிவித்துள்ளார்.

இதேபோல, பல்வேறு அரசியல் கட்சிகளும் தனித்தனியே போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

துண்டறிக்கை விநியோகம்

இதற்கிடையில், ஆலங்குடி வட்டாரத்தில் நெடுவாசல், கீரமங் கலம், வடகாடு உள்ளிட்ட பகுதி களில் இயற்கை எரிவாயு எடுப்ப தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித மாக பதாகைகள் வைக்கப்பட்டுள் ளன. துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க உள்ள இடம் மட்டுமின்றி வடகாடு, வாணக்கன் காடு, கோட்டைக்காடு கிராமங் களில் எரிபொருள் ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ள இடங்களை யும் பல்வேறு கட்சியினர் பார்வை யிடுவதுடன் அப்பகுதியினரிடம் கருத்துக் கேட்டுச் செல்கின் றனர்.

இதன்மூலம் இயற்கை எரி வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டக் களம் சூடுபிடித்திருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x