Published : 29 Jun 2015 12:25 PM
Last Updated : 29 Jun 2015 12:25 PM

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே தொடங்கியது சென்னை மெட்ரோ ரயில் சேவை

ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் இன்று (திங்கள்கிழமை) பகல் 12.10 மணியளவில் தொடங்கிவைத்தார்.

முதல்வர் கொடியசைத்து வைக்க ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

மேலும், கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும் கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிமனையையும் முதல்வர் திறந்துவைத்தார்.

தொடக்க விழாவையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் முதல் பயணத்தை காண ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தினர்.

சிறப்பு வீடியோ பதிவு