Published : 21 Sep 2015 10:32 AM
Last Updated : 21 Sep 2015 10:32 AM

ஆதரவற்ற ஏழை முதியவர்களின் வீடு தேடிச் சென்று பசி தீர்க்கும் சேவை: கரூரில் 2 ஆண்டுகளாக இலவச உணவளித்து வரும் தன்னார்வலர்கள்

கரூரில் ஆதரவற்ற ஏழை முதியவர் களின் வீடு தேடிச் சென்று நாள் தோறும் இலவசமாக உணவு வழங்கி பசிபோக்கும் சேவையில் 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்ற னர் இரு தன்னார்வலர்கள்.

கரூர் செல்லாண்டிபாளையத் தைச் சேர்ந்தவர் சங்கர் (48). எலெக்ட்ரானிக் கடை டீலர். கரூர் கருப்பாயி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). சொந்தமாக நகைத் தொழில் செய்து வருகிறார். இருவரும் பல ஆண்டுகளாக சித்தர் கருவூரார் அறக்கட்டளை மூலம் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ள கருவூரார் சன்னதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அன்னதானம் செய்து வருகின்றனர்.

முதுமை காரணமாக வேலைக் குச் செல்லமுடியாத ஆதரவற்ற ஏழை முதியவர்களின் பசியைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் சங்கருக்கு இருந்தது. 2 ஆண்டு களுக்கு முன்பு இதனை செயல் வடிவத்துக்கு கொண்டுவந்தார்.

கரூர் வெங்கமேடு அருகம் பாளையம் பகுதியில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க முடியாத, மகன் மற்றும் மகள்களால் கைவிடப்பட்ட முதியவர்களை தன் நண்பர்களின் உதவியுடன் கண்டறிந்தார். கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் 50 முதல் 60 பேருக்கு தக்காளி, தயிர், லெமன் சாதம் தயாரித்து பொட்டலமாகக் கட்டித்தர ஏற்பாடு செய்தார்.

அவற்றை அட்டைப் பெட்டியில் எடுத்துக்கொண்டு இருசக்கர வாக னத்தில் அருகம்பாளையம் பகுதி யில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, இயலாத ஏழை முதிய வர்கள், செல்லும் வழியில் 10-க்கும் மேற்பட்டோர், கரூர் முத்துராஜபுரம் பகுதியில் உள்ள முதியவர்கள் என தினமும் சுமார் 60 பேருக்கு தலா 2 உணவுப் பொட்டலங்களை சங்கரும் மணிகண்டனும் வழங்கி வருகின்றனர்.

நாள்தோறும் மதியம் 1 மணி முதல் ஒன்றரை மணிக்குள் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப் பட்டுவிடும். ஒரு முதியவரின் வேண்டுகோளுக்கிணங்க, அவருக்கு இரவு உணவும் அளித்து வருகின்றனர்.

இந்த சேவை குறித்து அறிந்த பலரும் இவர்களுக்கு உதவி வருகின்றனர். பலரும் தங்கள் வீட்டு விசேஷ நாட்களில் செய்யும் வடை, பாயசம் போன்றவற்றை இருவரின் மூலம் முதியவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

உணவளிப்பதுடன், முதியவர் களுக்கு தேவைப்படும் மருந்து களை வாங்கவும் பண உதவி செய்கின்றனர். குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ள போர்வை வழங்குகின்றனர்.

இதுகுறித்து சங்கர் கூறியபோது, “கடந்த 2 ஆண்டுகளாக இச்சேவையை செய்துவருகிறோம். விநாயகர் சதுர்த்தியன்று 3-ம் ஆண்டு தொடங்கியது. அன்று அனைவருக்கும் உணவுடன் லட்டு வழங்கினோம். முதுமை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத ஆதரவற்ற, உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்ற நோக்குடன் இச்சேவையை செய்துவருகிறோம்.

மதியம் உணவு வழங்க வேண் டியுள்ளதால் வெளியூர்களுக்கு செல்வதில்லை. குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவதில்லை. தொழில் தொடர்பான சந்திப்புகளை யும் மதியத்தில் தவிர்த்து விடுவேன்.

ஆதரவற்ற ஏழை முதியவர்கள், ஏழைகளுக்காக சிறுநீரக, இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் கொண்ட இலவச மருத்துவமனை கட்டவேண்டும் என்பதே என் லட்சியம்” என்றார்.

தக்காளி, தயிர், லெமன் சாதம் தயாரித்து பொட்டலமாகக் கட்டி இருசக்கர வாகனத்தில் அருகம்பாளையம் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழை முதியவர்கள், செல்லும் வழியில் 10-க்கும் மேற்பட்டோர், கரூர் முத்துராஜபுரம் பகுதியில் உள்ள முதியவர்கள் என தினமும் சுமார் 60 பேருக்கு தலா 2 உணவுப் பொட்டலங்களை சங்கரும் மணிகண்டனும் வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x