Published : 08 Feb 2017 01:10 AM
Last Updated : 08 Feb 2017 01:10 AM

அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: சசிகலா அறிவிப்பு

அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர் என்றும் முதல்வராக தான் சிறப்பாக பணியாற்றியது சசிகலாவின் குடும்பத்தாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது என்றும் கூறியதை அடுத்து அவர் பொருளாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், "என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக தெறித்திருந்தார் தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது, | விரிவாக வாசிக்க > >கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்: ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி: சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டு |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x