Published : 06 Apr 2016 05:56 PM
Last Updated : 06 Apr 2016 05:56 PM

அதிமுக பட்டியலில் 4-ம் முறை மாற்றம்: ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்கிழமை) அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ஜி.முத்துராஜா நீக்கப்பபட்டு, அத்தொகுதியின் புதிய வேட்பாளராக வைகை செல்வன் அறிவிக்கப்பட்டார்.

இன்று (புதன்கிழமை) காலையில் தமிழகம், புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர்கள் மொத்தம் 10 பேர் மாற்றப்பட்டனர். ஆட்சி மன்ற குழு பரிசீலித்து இம்முடிவை எடுத்துள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. | அதன் விவரம் > >அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு

இதைத் தொடர்ந்து பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சி.வி.இளங்கோவன் நீக்கப்பட்டு, சி.ஆர்.சரஸ்வதி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ். பாண்டியன் நீக்கப்பட்டு, மதுரை மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இரண்டே நாட்களில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 4-வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, மொத்தம் 13 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x