Published : 15 Feb 2017 02:38 PM
Last Updated : 15 Feb 2017 02:38 PM

அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ சரவணன் புகார்

கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்தி வைத்துள்ளனர் என்று சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூர் விடுதியிலிருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாகக் கூறினார்.

இது குறித்து மேலும் சரவணன் கூறுகையில், ''அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நான் அங்கிருந்து தப்பிப்பதற்காக சாதாரண பெர்முடாஸ், டீ-சர்ட் அணிந்து நல்ல சந்தர்ப் பத்தை எதிர்பார்த்து காத்திருந் தேன். 13-ம் தேதி மதியம் சசிகலா அங்கு வருவதற்கு முன் மாறுவேடத்தில் தப்பிவிட வேண்டும்; இல்லாவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்று திட்டம் போட்டேன். அங்கு என்னைப்போல் அனைத்து சட்டப்பேரவை உறுப் பினர்களும் மனதளவில், உடலளவில் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

இதைத் தொடர்ந்து கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியே காரணம். அவர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கூவத்தூர் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ சரவணன் புகார் அளித்தார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ சரவணன் அளித்த புகாரை அடுத்து காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி வழக்குப் பதிவு செய்து, கூவத்தூர் சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.-க்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x