Published : 23 Dec 2016 08:59 AM
Last Updated : 23 Dec 2016 08:59 AM

இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத் தில் இருந்து நேற்றுமுன்தினம் அந்தோனிகிறிஸ் மற்றும் சார்லஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரு விசைப்படகுகளில் சென்ற அந்தோனிராஜ், ஆரோக்கியம், அருள், வினித், பிரதீப், சார்லஸ், ஜஸ்டின், ராயப்பன், சவரியான், ராஜு, ஜென்ஸன், அந்தோனி ஆகிய 12 பேர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்குச் சொந்த மான விசைப்படகில் பிரபு, எடிசன், ஜெயபால், ராஜ, சகாயம் ஆகிய 5 பேர் என 17 தமிழக மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற் படையினர் சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட 17 தமிழக மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன் வளத் துறையினரிடம் ஒப்படைப் பட்டு, விசாரணைக்குப் பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை ஜன. 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார்.

இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

பாம்பனில் இருந்து கிறிஸ்டி லியோன் என்பவருக்குச் சொந்த மான விசைப்படகில் கிறிஸ்டி லியோன், ரீகன், மலையாண்டி, பாண்டி, சேரிப்பிச்சை ஆகிய 5 மீனவர்களும் தலைமன்னார் அருகே புதன்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு கடல் எல்லையில் மீன் பிடித்ததாகக் கூறி நாட்டுப்படகை யும், விசைப்படகையும் கைப்பற்றி அதிலிருந்து மீனவர்கள் 12 பேரை யும் கைது செய்து மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வவுனியா சிறையில் அடைத்தனர்.

போராட்டம்

இதற்கிடையே சிறைபிடிக்கப் பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவப் பிரதி நிதி சிப்பிசேசு தலைமையில் பாம்பன் பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறைபிடிக் கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தி னர், மீனவப் பிரதிநிதி அருளானந் தம், பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக் ஆகி யோர் பங்கேற்றனர்.

கொழும்பில் ஜன.2-ம் தேதி இரு நாட்டு அமைச்சர்கள் அளவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னர் சிறைகளில் அடைக்கப்பட் டுள்ள மீனவர்கள் மற்றும் கைப்பற் றப்பட்ட படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x