Last Updated : 24 Mar, 2017 10:05 AM

 

Published : 24 Mar 2017 10:05 AM
Last Updated : 24 Mar 2017 10:05 AM

ஹரிகிருஷ்ணா டிரா

சீனாவின் ஷென் சென் நகரில் லாங்கேங்க் செஸ் கிராண்ட் மாஸ்டர் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 14-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹரிகிருஷ்ணா முதல் சுற்றில் 20-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த பீட்டர் விட்லெருடன் மோதினார்.

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகிருஷ்ணா துடிப்புடன் செயல்பட்டு விட்லெரை அதிர்ச்சிக்கு உள் ளாக்கினார். எனினும் விட்லெர் சாமர்த்தியாக காய்களை நகர்த் தினார். 30-வது நகர்த்தலின் போது இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த தொடர் டபுள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 7 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x