Last Updated : 23 Mar, 2017 10:02 AM

 

Published : 23 Mar 2017 10:02 AM
Last Updated : 23 Mar 2017 10:02 AM

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தர்மசாலாவில் இந்திய அணி பதற்றமடையும்: மிட்செல் ஜான்சன் கருத்து

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. புனே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட்டில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

தர்மசாலா அற்புதமான ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் புற்கள் இருப்பதை நான் பார்த் திருக்கிறேன். எனவே ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையுடன் இருக்கும் என கருதுகிறேன். அதேவேளையில் இந்திய அணி சற்று பதற்றமடையும். அவர்கள் இந்த தொடரை மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டனர். இது அவர்கள் சேர்த்த ரன்களை பார்த்தாலே தெரியும். தர்மசாலா போட்டியில் ஆஸ்திரேலிய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கும் என கருதுகிறேன். இதனால் ஓகீஃப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேக்சன் பேர்டு இடம் பெறக்கூடும்.

நாதன் லயன் பந்தை அதிக அளவில் பவுன்ஸ் செய்யக் கூடியவர். அதேவேளையில் அவரது பந்துகள் நன்கு திரும்பவும் செய்யும். தர்மசாலா ஆடுகளம் ஆஸ்திரேலிய ஆடுகளம் போன்று இருந்தால் ஜேக்சன் பேர்டு நிச்சயம் 3-வது வேகப்பந்து வீச்சாளராக இருப்பார்.

ராஞ்சி டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்தது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அளவிலான சாதகமான விஷயம். ஸ்டீவ் ஸ்மித், வார்னர் மட்டும் அல்லாமல் அணியில் உள்ள மற்ற வீரர்களாலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி போட்டியை டிராவில் முடிக்க முடியும் என்பதை இந்திய அணி உணர்ந்திருக்கும்.

போட்டி டிராவில் முடிந்தாலும் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் இது சிறப்பான விஷயம்தான். ஏனேனில் கடந்த காலங்களில் இதுபோன்ற நிலை மைகளில் சரிவையை சந்தித்துள் ளனர். இதனாலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x