Published : 23 Aug 2016 09:07 AM
Last Updated : 23 Aug 2016 09:07 AM

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் செயல்பாடு

இந்தியாவுக்கு 67-வது இடம்

இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67-வது இடம் பிடித்தது. கடைசி நாளில் மல்யுத்தம், மாரத்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 64 வீரர்கள், 54 வீராங்கனைகள் என மொத்தம் 118 பேர் கலந்து கொண்டனர்.

அதிகமானோர் பங்கேற்றதால் கடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிடுகை யில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வின் பதக்க எண்ணிக்கை இரட்டிப் பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களின் செயல்பாடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x