Published : 06 Aug 2016 09:09 AM
Last Updated : 06 Aug 2016 09:09 AM

ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் களம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் மிகப்பெரிய அணியும் இதுதான். அதன் விவரம்:

வில்வித்தை

அதானு தாஸ் (ஆடவர் தனிநபர் ரீகர்வ் பிரிவு), தீபிகா குமாரி, லட்சுமி ராணி, பம்பேலா தேவி (மூவரும் ரீகர்வ் தனிநபர் மற்றும் அணி பிரிவு).

குத்துச்சண்டை ஆடவர் பிரிவு:

சிவ தாபா (56 கிலோ எடைப் பிரிவு), மனோஜ் குமார் (64 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ).

ஜூடோ

அவதார் சிங் (ஆடவர் 90 கிலோ)

கோல்ஃப்

அனிருபன் லஹிரி, சிவசங்கர் பிரசாத் (இருவரும் ஆடவர் பிரிவு), அதிதி அசோக் (மகளிர் பிரிவு).

பாட்மிண்டன் ஆடவர் பிரிவு:

காந்த் (ஒற்றையர் பிரிவு), மனு அத்ரி-சுமீத் ரெட்டி (இரட்டையர் பிரிவு).

மகளிர் பிரிவு:

சாய்னா நெவால், சிந்து (இருவரும் ஒற்றையர் பிரிவு), ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா (இரட்டையர் பிரிவு)

தடகளம் ஆடவர் பிரிவு:

முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்,

4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (800 மீட்டர் ஓட்டம்), அங்கித் சர்மா (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஸ்வரி (மும்முறைத் தாண்டுதல்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), நிதேந்திர சிங் ராவத், கோபி தொனாகல், கேதா ராம் (மாரத்தான்), குருமீத் சிங், கணபதி ( 20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), மணீஷ் சிங் (20 கிலோ மீட்டர் மற்றும் 50 கிலோ மீட்டர் நடை பந்தயம்), சந்தீப் குமார் (50 கிலோ மீட்டர் நடை பந்தயம்), ஆரோக்கிய ராஜீவ், குன்கு முகமது, தருண் அய்யாசாமி, மோகன் குமார், லலித் மாத்தூர் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்).

மகளிர் பிரிவு:

டூட்டீ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), ஸ்ரபானி நந்தா (200 மீட்டர் ஓட்டம்), நிர்மலா (400 மீட்டர் ஓட்டம், 4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), டின்டு லூக்கா (800 மீட்டர் ஓட்டம்), சுதா சிங் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), லலிதா பாபர் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), சீமா பூனியா (வட்டு எறிதல்), ஓ.பி.ஜெய்ஷா, கவிதா ரவுத் (மாரத்தான்), குஷ்பிர் கவுர், சப்னா பூனியா (20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), பூவம்மா, அனில்டா தாமஸ், ஜிஸ்னா மேத்யூ, அஸ்வினி அகுஞ்ஜி, தேவ மஜும்தார் ( 4X400 மீட்டர் தொடர் ஓட்டம்).

டேபிள் டென்னிஸ்

அஜந்தா சரத் கமல், சவுமியாஜித் கோஷ் (ஆடவர் ஒற்றையர் பிரிவு), மவுமா தாஸ், மணிகா பத்ரா (மகளிர் ஒற்றையர் பிரிவு).

டென்னிஸ்

லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா (ஆடவர் இரட்டையர் பிரிவு), சானியா, பிரார்த்தனா தாம்ப்ரே (மகளிர் இரட்டையர் பிரிவு), போபண்ணா, சானியா (கலப்பு இரட்டையர் பிரிவு).

பளு தூக்குதல்

சதீஷ் குமார் (ஆடவர் 77 கிலோ), மீராபாய் சானு (மகளிர் 48 கிலோ).

ஜிம்னாஸ்டிக்ஸ்

தீபா கர்மாகர் (மகளிர் தனிநபர் ஆர்டிஸ்டிக்).

துடுப்பு படகு

தத்து போகனால் பாபன் (ஆடவர் ஒற்றை துடுப்பு).

நீச்சல்

சாஜன் பிரகாஷ் (ஆடவர் 200 மீட்டர் பட்டர்பிளை), ஷிவானி கட்டாரியா (மகளிர் 200 மீட்டர் பட்டர்பிளை).

துப்பாக்கிச் சுடுதல்

ஆடவர் பிரிவு:

அபிநவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), பிரகாஷ் நஞ்சப்பா (50 மீட்டர் பிஸ்டல்), ககன் நரங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ்), ஜித்து ராய் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் பிஸ்டல்), செயின் சிங் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ்), குருபிரீத் சிங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மானவ்ஜித் சிங், கினான் செனாய் (டிராப்), மைராஜ் அஹமதுகான் (ஸ்கீட்).

மகளிர் பிரிவு:

அபூர்வி சண்டிலா, அயோனிகா பால் (10 மீட்டர் ஏர் ரைபிள்), ஹீனா சித்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்).

மல்யுத்தம்

ஆடவர் ப்ரீஸ்டைல்:

யோகேஷ்வர் தத் (65 கிலோ), நர்சிங் யாதவ் (74 கிலோ), சந்தீப் தோமர் (57 கிலோ).

ஆடவர் கிரேக்கோ ரோமன்: ரவீந்திர கேத்ரி (85 கிலோ), ஹர்தீப் சிங் (98 கிலோ).

மகளிர் ஃப்ரீஸ்டைல்:

வினேஷ் போகத் (48 கிலோ), பபிதா குமாரி (53 கிலோ), சாக்ஸி மாலிக் (58 கிலோ).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x