Published : 26 Mar 2017 11:00 AM
Last Updated : 26 Mar 2017 11:00 AM

மியாமி ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் நடால்

அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் இஸ்ரேலின் டுடி செலாவை வீழ்த்தினார்.

3-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் செர்பியாவின் விக்டர் டிரோசிக்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 4-6, 6-2, 3-6 என்ற செட்கணக்கில் பிரான்சின் ஜெர்மி சார்டியிடம் தோல்வியடைந்தார். மற்ற ஆட்டங்களில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டஸ்கோ, ஜப்பானின் நிஷிகோரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் சீனாவின் டுயன் யிங்-யிங்யை வீழ்த்தினார். 13-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா வெஸ்னினா 6-3, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் அஜ்லா டாம் ஜனோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

11-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லி யம்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பிரேசிலின் பீட்ரிஸையும், 3-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நவோமி ஒசாகா வையும், 6-ம் நிலை வீராங்கனை யான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 0-6, 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ் டினா மெக்ஹாலேவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x