Last Updated : 24 Oct, 2014 10:55 AM

 

Published : 24 Oct 2014 10:55 AM
Last Updated : 24 Oct 2014 10:55 AM

பாட்மிண்டன் தரவரிசை காஷ்யப், ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனத்தின் தரவரிசையில் இந்திய வீரர்கள் காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர் தலா 7 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஸ்ரீகாந்த் தற்போது 16-வது இடத்திலும், காஷ்யப் 21-வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தொடர்ந்து 10-வது இடத்தில் உள்ளார். ஆடவர் மற்றும் மகளிர் தரவரிசையில் முறையே மலேசியாவின் லீ சாங் வெய் மற்றும் சீனாவின் லீ ஸியூரூய் ஆகியோர் முதலிடங்களில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x