Last Updated : 27 Nov, 2014 10:32 AM

 

Published : 27 Nov 2014 10:32 AM
Last Updated : 27 Nov 2014 10:32 AM

பவுன்சர் தாக்கி காயமடைந்த பிலிப் ஹியூஸ் உயிரிழப்பு

பந்து தாக்கியதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் நேற்று மரணமடைந்தார்.

சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பில் ஹியூஸ், நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். 25 வயது வீரரான பிலிப் ஹியூஸின் மரணம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷெப்பீல்டு ஷீல்டு’ கோப்பைக் கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்த பில் ஹியூஸ், நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாட் வீசிய பவுன்சரை அடித்து ஆட முற்பட்டார். அப்போது அவருடைய கணிப்பு தப்பவே, பந்து அவருடைய இடது கழுத்துப் பகுதியில் பலமாகத் தாக்கியது. நிலைகுலைந்த பில் ஹியூஸ் மைதானத்தில் சரிந்தார்.

உடனடியாக செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹியூஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார்.

பில் ஹியூஸ் மரணமடைந்ததை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மருத்துவர் பீட்டர் புரூக்னர் நேற்று மதியம் உறுதி செய்தார். அப்போது பேசிய அவர், “கொஞ்ச நேரத்துக்கு முன்னதாக பிலிப் ஹியூஸ் மரணமடைந்துவிட்டார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். பந்து தாக்கியபோது காயம் அடைந்து மயங்கி விழுந்த அவருக்கு கடைசி வரை நினைவு திரும்பவில்லை. உயிர் பிரிந்தபோது அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவி னர்கள் அவரை சூழ்ந்திருந்தனர். உயிர் பிரியும்போது கூட அவர் வலியை உணரவில்லை” என்றார்.

“பிலிப் ஹியூஸின் மரணம் ஈடுசெய்ய முடியாததாகும். அவரை இழந்துவாடும் அவரு டைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கிரிக்கெட் சமூகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கி றோம். இந்தத் தருணத்தில் ஹியூஸ் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு அனைத்து வீரர்களும் மதிப்பளிக்க வேண்டும்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மருத்து வமனைக்கு வந்திருந்தனர். அவர்கள் கதறியழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x