Last Updated : 26 Feb, 2017 02:53 PM

 

Published : 26 Feb 2017 02:53 PM
Last Updated : 26 Feb 2017 02:53 PM

தோனியால் மீண்டும் ‘பினிஷிங்’ செய்ய முடியவில்லை: கர்நாடகாவிடம் தோற்றது ஜார்கண்ட்

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியில் கர்நாடக அணி தோனி தலைமை ஜார்கண்ட் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பிரிவு டி ஆட்டமொன்றில் வீழ்த்தியது.

ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கர்நாடக அணி 266 ரன்களை எடுத்தது, கேப்டன் மணிஷ் பாண்டே அதிகபட்சமகா 77 ரன்களையும், ரவிகுமார் சமர்த் என்ற வீரர் அதிரடி 71 ரன்களையும் எடுத்தனர், ஜார்கண்ட் தரப்பில் ராகுல் ஷுக்லா 4 விக்கெட்டுகளையும் வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ரினர். தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி 49.5 ஓவர்களில் 261 ரன்களை எடுத்து 5 ரன்கள் பின் தங்கி தோல்வி தழுவியது.

மகேந்திர சிங் தோனி இரண்டு மிகப்பெரிய சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரால் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியவில்லை.

ஜார்கண்ட் அணி 79/4 என்று தடுமாறிய போது தோனி களமிறங்கினார். ஆனால் முதல் ரன்னை எடுக்க 8 பந்துகள் எடுத்துக் கொண்டார். ஸ்டூவர்ட் பின்னி பந்தில் தன் முதல் ரன்னை 8 பந்துகள் கழித்து எடுத்தார். சவுரவ் திவாரி (68) உடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 81 ரன்கள் சேர்த்ததில் தோனியின் பங்களிப்பு 43 ரன்கள்.

23 பந்துகளுக்குப் பிறகே தோனி சுதந்திரமாக அடித்து ஆடினார். ஐபிஎல் ஏலத்தில் ரூ.2 கோடி ஏலம் எடுக்கப்பட்ட கிருஷ்ணப்பா கவுதம் என்ற ஸ்பின்னரை மிட்விக்கெட் மீது ஒரு மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். அதே போல் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் டி.பிரதீப் பந்து வீச்சையும் அடித்து ஆடத் தொடங்கினார் தோனி.

ராபின் உத்தபா ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பையும் கேட்ச் ஒன்றையும் கோட்டை விட்டார். தோனி இருமுறை மட்டையை மாற்ற, ரசிகர்களோ தோனியின் தடுப்பாட்டத்தை கூட உற்சாகமாக வரவேற்றனர்.

ஆனால் ஸ்கோர் 160 ஆக இருக்கும் போது, வெற்றிக்கு இன்னும் நூறுக்கும் அதிகமான ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் பந்தை விக்கெட் கீப்பருக்கு பின்னால் ஸ்கூப் ஆட முயன்று லெக் ஸ்டம்பை இழந்தார். ஆனால் ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கவுதம்தான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜார்கண்ட் தோல்விக்கு முக்கியக் காரணமாக திகழ்ந்தார்.

தோனிக்குப் பிறகு சவுரவ் திவாரி வெற்றிக்காக போராடினர், ஆனால் இவரை கவுதம் வீழ்த்த ராகுல் சுக்லா இறங்கி 21 பந்துகளில் 24 ரன்களை விலாசினார், மோனு குமார் என்ற வீரர் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 10 பந்தில் 17 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு ஜார்கண்டுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கடைசி பந்துக்கு முதல் பந்தில் ஷுக்லாவை சமயோசிதமாக ரன் அவுட் செய்ய கர்நாடக அணி வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x