Last Updated : 25 Apr, 2015 04:21 PM

 

Published : 25 Apr 2015 04:21 PM
Last Updated : 25 Apr 2015 04:21 PM

தனது பெண் குழந்தைக்கு இந்தியா என்று பெயர் சூட்டிய ஜான்ட்டி ரோட்ஸ்

தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும் உலகின் சிறந்த பீல்டருமான ஜான்ட்டி ரோட்ஸ்-மெலானி தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இந்தியா ஜான் ரோட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலானிக்கு வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. இந்தப் பெண் குழந்தைக்கு இந்தியா ஜான் ரோட்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் வசதிகள் குறைவு என்ற காரணத்தினால் மும்பை மருத்துவமனையில் மனைவியை அனுமதித்திருந்தார் ரோட்ஸ். இந்நிலையில் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.7 கிலோ எடை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x