Last Updated : 01 Oct, 2014 03:37 PM

 

Published : 01 Oct 2014 03:37 PM
Last Updated : 01 Oct 2014 03:37 PM

ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம்

ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.

சீனாவில் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு இதே ஜப்பானிடம் 0-1 என்று தோல்வி தழுவி வெண்கலத்தை இழந்த இந்திய மகளிர் இந்த முறை உறுதியுடன் ஆடி வெண்கலம் வென்றனர்.

டிராக்பிளிக் நிபுணி என்று கருதப்படும் ஜஸ்ப்ரீத் கவுர் 23ஆம் நிமிடத்திலும், வந்தனா கதாரியா 42வது நிமிடத்திலும் இந்திய அணிக்காக கோல்களை அடித்தனர்.

ஜப்பான் வீராங்கனை அகனே ஷிபாதா 41 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

முதல் கால்பகுதி ஆட்டத்தில் விரயமாகிப் போன ஷாட்களின் பின்னணியில் 23ஆம் நிமிடத்தில் அடுத்தடுத்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய மகளிர் அணி கோலாக மாற்றியது.

ஆட்டம் முடியும் தறுவாயில் ஜப்பான் அணி கடும் நெருக்கடி கொடுத்தது. 54வது நிமிடத்தில் இந்திய கோல் கீப்ப்பர் சவிதா அபாரமாக ஜப்பான் கோல் முயற்சி ஒன்றைத் தடுத்தார். ஆனால் அதுவும் பெனால்டி கார்னராக முடிந்தது.

ஆனால் பெனால்டி ஷாட் வெளியே சென்றதால் இந்தியா தப்பித்தது. கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு அருமையான கோல் வாய்ப்பு கிடைத்தது. வந்தனா ஓபன் கோலை கோட்டை விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x