Published : 27 Nov 2014 11:15 AM
Last Updated : 27 Nov 2014 11:15 AM
பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர், ட்விட்டரில் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அதிவேக பவுன்சர் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார். | படிக்க:>பவுன்சர் தாக்கி காயமடைந்த பிலிப் ஹியூஸ் உயிரிழப்பு
"இது கிரிக்கெட் உலகிற்கு வருத்தமான நாள். மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் அவரது பரிச்சயம் ஏற்பட்டது. செய்யும் வேலையின் மீது ஆழ்ந்த சிரத்தை கொண்டவர்" என்று முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
25 வயதான ஹியூஸின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும், தன்னை சோகத்தில் ஆழ்த்தியதாகவும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட், க்ளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக், ஏ பி டிவில்லியர்ஸ், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே உள்ளிட்ட பலரும் ஹியூஸின் மரணத்திற்கு அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
பிலிப் ஹியூஸின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ள இரங்கல் செய்திகள் சில
Shocked and saddened. Phil Hughes you will live on in our hearts. RIP worst day in world cricket
>#peace>#PhilHughes
— Suresh Raina (@ImRaina)
>November 27, 2014
Sad day for cricket
>@CricketAus Phil Hughes RIP. Knew him whilst he came over to MI, thorough Pro..will miss you.
>@mipaltan
Such terrible news with the passing of Phil Hughes. Our deepest sympathies to his family.
— Glenn McGrath (@glennmcgrath11)
>November 27, 2014
No no no no no. RIP Phillip Hughes
— Adam Gilchrist (@gilly381)
>November 27, 2014
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT