Published : 26 Feb 2017 10:48 AM
Last Updated : 26 Feb 2017 10:48 AM

கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது.

விஜய் ஹசாரே கோப்பைக் கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் கட்டாக்கில் நேற்று நடந்த போட்டியில் டெல்லியை எதிர்த்து தமிழக அணி ஆடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 314 ரன்களைக் குவித்தது. தினேஷ் கார்த்திக் 97 பந்துகளில் 118 ரன்களை விளாசினார்.

இதைத்தொடர்ந்து ஆடிய டெல்லி அணி, 46.4 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி 42 ரன்களில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் மிலிந்த் குமார் அதிகபட்சமாக 68 ரன்களை எடுத்தார். தமிழக அணியில் அந்தோணி தாஸ் 3 விக்கெட்களையும், விஜய் ஷங்கர், மொகமது, ராஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தோனியின் தலைமையிலான ஜார்க்கண்ட் அணிக்கும், கர்நாடக அணிக்கும் இடையி லான மற்றொரு போட்டியில் கர்நாடகம் வென்றது. இப்போட்டியில் கர்நாடக அணி 266 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய ஜார்கண்ட் அணியால் 261 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x