Published : 29 Jul 2014 03:10 PM
Last Updated : 29 Jul 2014 03:10 PM

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் எடுத்து பில் ஹியூஸ் சாதனை

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் பிலிப் ஹியூஸ்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ, ஆஸ்திரேலியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா திறன் வளர்ப்பு அணி ஆகியவற்றிற்கு இடையேயான நாற்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹியூஸ் இரட்டை சதம் அடித்துச் சாதனை புரிந்தார்.

டார்வின் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் பிலிப் ஹியூஸ் 151 பந்துகளில் 18 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 202 ரன்கள் விளாசினார். கடைசி பந்தை சிக்சர் அடித்து இரட்டைச் சத சாதனையை நிகழ்த்தினார் இடது கை பேட்ஸ்மென் பிலிப் ஹியூஸ்.

இதற்கு முன்பாக டேவிட் வார்னர் நியுசவுத்வேல்ஸ் அணிக்காக விக்டோரியா அணிக்கு எதிராக கடந்த சீசனில் எடுத்த 197 ரன்களே ஆஸ்திரேலிய சாதனையாக இருந்தது.

ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிந்தா கிளார்க் டென்மார்க் அணிக்கு எதிராக 1997/98 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது எடுத்த 229 ரன்கள் சாதனை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிலிப் ஹியூஸ் 104 பந்துகளில் சதம் எடுத்தார். ஆனால் 47 பந்துகளில் அடுத்த சதத்தை எடுத்தார். கடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள் விளாசபப்பட்டது. 110லிருந்து 202 ரன்களுக்கு அவர் கடைசி 10 ஓவர்களில் சென்றார்.

ஆஸ்திரேலியா ஏ 50 ஓவர்களில் 349 ரன்களுக்கு 4 விக்கெட் என்று முடிந்தது. இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 37.4 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி தழுவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x