Published : 28 Oct 2016 08:05 AM
Last Updated : 28 Oct 2016 08:05 AM

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடாததே தோல்விக்கு காரணம்: இந்திய கேப்டன் தோனி கருத்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடாததே தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து அணி களுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி நிருபர்களிடம் கூறியதாவது:

பேட்டிங் வரிசையில் 5, 6, அல்லது 7-வது இடத்தில் வந்து சிறப்பாக பேட்டிங் செய்து ஆட் டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் வேலை கஷ்டமானது. குறிப்பாக ராஞ்சி போன்ற மெது வான ஆடுகளங்களில் இந்த பணி கடினமாக இருக்கும். இதற்கு ஏற்ற வீரர் ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் அக்‌ஷர் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் நன்றாக ஆடினார்கள். ஆனால் அவர் களால் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடிய வில்லை. அவர்கள் அந்த தகுதி யைப் பெற இன்னும் நிறைய அவகாசம் கொடுக்கவேண்டும்.

இந்திய அணி சமீபகாலத்தில் அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. ஆடிய சில போட்டி களும் ஜிம்பாப்வே போன்ற வலிமை குறைந்த அணிகளுக்கு எதிராகத்தான் இருந்தன. இந்தத் தொடரில் இந்திய அணி தடு மாறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். பேட்டிங்கின்போது சரியான பார்ட்னர்ஷிப்கள் அமை யாதது தோல்விக்கு மற்றொரு காரணம்.

இந்த தொடரில் 2 போட்டிகளில் தோற்றபோதிலும் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தியுள்ளனர். அணியின் தேவைக்கு ஏற்றவாறு நான் எனது பேட்டிங் வரிசையை மாற்றிக் கொள்கிறேன். அதனாலேயே கடந்த 2 போட்டிகளில் நான் 4-வது பேட்ஸ்மேனாக களம் இறங் கினேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

“சமீப காலமாக இந்திய அணி வெற்றி பெற விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் நம்பியுள்ளதா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த தோனி, “அப்படி இல்லை. அவர் சிறப்பாக ஆடாத போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது” என்றார்.

இப்போட்டியில் 72 ரன்களைக் குவித்து நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய குப்தில் நிருபர் களிடம் கூறியதாவது:

ராஞ்சி மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் விரும்பியபடி என்னால் சரளமாக ஆட முடிய வில்லை. இருப்பினும் நியூஸி லாந்து அணி வெற்றிபெற நான் எடுத்த ஸ்கோர் உதவியாக இருந்த தில் மகிழ்ச்சி.

ஆட்டத்தின் தொடக் கத்தில் அடித்து ஆட வசதியாக பந்து சீராக வந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. கடைசி ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக ஆடி எங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித்தர முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு குப்தில் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x