Published : 24 Apr 2017 09:54 AM
Last Updated : 24 Apr 2017 09:54 AM

என்னால் இந்தச் சரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை: விராட் கோலி வேதனை

49 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சி தோல்வியடைந்ததையடுத்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி கடும் ஏமாற்றமடைந்தார்.

ஆட்டம் முடிந்தவுடன் அவர் கூறும்போது, “மிகமோசமான ஆட்டம். உண்மையில் இந்தத் தோல்வி காயப்படுத்துகிறது. கொல்கத்தாவை முதல் பாதியில் குறைந்த ரன்களுக்குச் சுருட்டியதன் சாதகங்களை பெறுவோம் என்று நினைத்தேன்.

மிகவும் பொறுப்பற்ற பேட்டிங். இதைத் தவிர என்னால் இப்போது வேறு எதுவும் கூற முடியாது, இதனை என்னால் ஏற்று கொள்ள முடியாது. இங்கு சைட் ஸ்க்ரீன் சிறியது, நான் பந்தை எதிர்கொள்ளும் போது யாரோ ஒருவர் சைட் ஸ்க்ரீன் அருகே எழுந்து நின்றார், இதனால் என் கவனம் சிதறியது. ஆனால் இது சாக்குபோக்கு அல்ல, 1 விக்கெட் போனால் என்ன மீதி வீரர்கள் வெற்றி பெற்று தந்திருக்க முடியும்.

எங்கள் ஆட்டம் பற்றி ஆய்வு செய்ய ஒன்றுமில்லை, ஆய்வு செய்ய இடமில்லாத அளவுக்கு மிக மோசமான பேட்டிங். நாங்கள் இதனை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்.

கடந்த போட்டியில்தான் 200 ரன்களுக்கும் மேல் எடுத்தோம், அனைவரும் என்ன தவறு செய்தோம் என்று உணர்ந்திருப்பார்கள். அடுத்த போட்டியில் தீவிரமாக களமிறங்க வேண்டும். அடுத்த போட்டிகளில் வென்று இழந்த உத்வேகத்தை மீண்டும் பெறுவோம்” என்றார் கோலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x