Published : 04 Sep 2015 09:49 AM
Last Updated : 04 Sep 2015 09:49 AM

ஈஷா கிராமோற்சவம் நிகழ்ச்சி: சச்சின் இன்று கோவை வருகிறார்

ஈஷா சார்பில் நடத்தப்படும் கிராமோற்சவம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோவைக்கு இன்று (செப்.4) வருகிறார்.

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் மூலமாக 2003-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் கிராமோற்சவம் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின் றன. நலிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் வழக்கில் கொண்டு வருவதுதான் கிராமோற்சவத்தின் முக்கிய நோக்கம்.

ஈஷா கிராமப்புற இயக் கத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் கிராமங்க ளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் 640 கிராமங்களில் இருந்து 7,680 வீரர்கள் வாலிபால், எறிபந்து, கபடி, கிரிக் கெட் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக் கான எறிபந்து ஆகியவற்றின் இறுதிப் போட்டிகள் இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகின்றன.

மாலையில் இங்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்கிறார். வெற்றி பெற்ற அணிகளுக்கு சச்சின் டெண்டுல்கர், சத்குரு ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத் துக்கு சச்சின் டெண்டுல்கர் மாலை 4 மணிக்கு வருகிறார் என ஈஷா சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x