Last Updated : 29 Apr, 2017 09:05 PM

 

Published : 29 Apr 2017 09:05 PM
Last Updated : 29 Apr 2017 09:05 PM

இப்படி ஆடிவிட்டு எப்படிப் பேசுவது? : தோல்வியில் விராட் கோலி விரக்தி

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில் புனே அணிக்கு எதிரான தோல்வி குறித்தும் ஒட்டுமொத்தமாக அணியின் ஆட்டம் குறித்தும் பெங்களூரு கேப்டன் விராட் கோலி கடும் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஜெயண்ட் அணியின் 157 ரன்கள் இலக்கை விரட்டும் போது ஆர்சிபி 96/9 என்று முடிந்தது, இதில் கோலி 55 ரன்கள்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து பேசிய விராட் கோலியின் பேச்சில் விரக்தி தொனித்தது

என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டு இங்கு நின்று பேசுவது கடினமாக இருக்கிறது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் ரேசில் நாங்கள் இல்லை. மீதியுள்ள 4 ஆட்டங்களையும் முடிவுகள் பற்றி கவலைப்படாமல் மகிழ்வுடன் ஆட வேண்டியதுதான்.

நாங்கள்தான் போட்டியைத் தோற்றோமே தவிர அவர்கள் வெல்லவில்லை, இது போன்ற அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும்.

அணியின் மோசமான ஆட்டத்துக்கு சில காரணங்கள் இருக்கலம். கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சிறந்த பேட்டின் அணி என்றே எங்களை ரசிகர்கள் நோக்கினர். தோல்விக்கு குறிப்பிட்ட காரணத்தை சுட்ட முடியவில்லை, அவுட் ஆவதற்கு தயக்கமாக இருக்கலாம் ரன்கள் எடுக்க தயக்கமாக இருக்கலாம்.

இவ்வாறு கூறினர் விராட் கோலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x