Published : 28 Sep 2016 02:37 PM
Last Updated : 28 Sep 2016 02:37 PM

2 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் காம்பீர்

2 வருடங்களுக்கு பிறகு கவுதம் காம்பீர் இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கொல்கத்தாவில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட்டில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு பதிலாக மூத்த வீரர் கவுதம் காம்பீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதே போல் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஹரியாணாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது.

காம்பீர் சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள் ளார். அவர் துலீப் டிராபியில் 5 இன்னிங்ஸில் 71.20 சராசரி யுடன் 356 ரன்கள் சேர்த்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள் ளார்.

காம்பீர் தேர்வு குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “அணி தேர்வின்போது காம்பீரை எப்போதுமே பரிசீலனை செய் வோம். உள்ளூர் தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் சொந்த மண்ணில் 12 முதல் 13 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளதால் டாப் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என அணி நிர்வாகம் கருதுகிறது’’ என்றார்.

34 வயதான காம்பீர், கடைசி யாக 2014-ம் ஆண்டு இங்கிலாந் துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். சேவக் குடன் காம்பீர் தொடக்க வீரராக களமிறங்கி 4,412 ரன்கள் குவித்து சாதனையும் படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க ஜோடியாகவும் இவர்கள் திகழ்ந்தது குறிப்பிடத் தக்கது. 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய காம்பீர் 42.58 சராசரியுடன் 4,046 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதமும், 21 அரை சதங்களும் அடங்கும்.

26 வயதான ஜெயந்த் யாதவ் சுழற்பந்து வீச்சுடன் பேட்டிங்கில் பின்கள வரிசையில் கைக்கொடுக் கக்கூடியவர். சமீபத்தில் ஆஸ்தி ரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் 7 விக்கெட்கள் கைப்பற்றினார். 2104-15 ரஞ்ஜி டிராபியில் 33 விக்கெட்களையும் ஜெயந்த் வீழ்த்தினார். முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஜெயந்த் இரட்டை சதமும் அடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x