Last Updated : 22 Nov, 2014 12:30 PM

 

Published : 22 Nov 2014 12:30 PM
Last Updated : 22 Nov 2014 12:30 PM

ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்: கோலி நம்பிக்கை

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எங்களால் வீழ்த்த முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்று இரவு மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, “வரக்கூடிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாகவும், நேர்மறையான எண்ணத்தோடும் விளையாடுவார்கள். இளம் வீர்களைக் கொண்ட இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட முடியும். எங்கள் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x