Published : 11 Jul 2018 06:26 PM
Last Updated : 11 Jul 2018 06:26 PM

இங்கிலாந்துக்கு எதிராக தோனிக்காக காத்திருக்கும் சாதனைத்துளிகள்: சச்சின், திராவிட், கங்குலியுடன் இணைகிறார்

இங்கிலாந்துக்கு எதிராக முக்கியமான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (12) தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீரர்கள் சிலபல மைல்கல்லை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தோனி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுக்க 33 ரன்கள் தேவை. நாளை நாட்டிங்கம், டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறும் போட்டியில் தோனி இந்த ரன்களை எடுத்தாரென்றால் சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர் அடங்கிய இந்திய 10,000 ரன்கள் கிளப்பில் தோனி இணைவார்.

இந்திய அளவில் 4வது வீரராக 10,000 ரன்கள் கிளப்பில் தோனி இணையும் அதே வேளையில் உலக அளவில் 12வது வீரராக 10,000 கிளப்பில் இணைவார்.

சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார், இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் சங்கக்காரா 14234 ரன்களுடனும், ரிக்கி பாண்டிங் 13,074 ரன்களுடனும் சனத் ஜெயசூரியா 13,430 ரன்களுடனும் மகேலா ஜெயவர்தனே 12,650 ரன்களுடனும் இன்சமாம் உல் ஹக் 11,739 ரன்களுடனும், ஜாக் காலீஸ் 11,579 ரன்களுடனும், கங்குலி 11,363 ரன்களுடனும் திராவிட் 10,889 ரன்களுடனும், லாரா 10,405 ரன்களுடனும், திலகரத்ன தில்ஷன் 10290 ரன்களுடனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சங்கக்காராவுக்கு அடுத்தபடியாக தோனி 10000 ரன்கள் மைல்கல்லை எட்டும் 2வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாகத் திகழ்வார்.

மேலு இதுவரை ஒருநாள் போட்டிகளில் 297 கேட்ச்களை எடுத்துள்ள தோனி இன்னும் 3 கேட்ச்களை எடுத்தால் 300 கிளப்பில் இணைவார். 318 ஒருநாள் போட்டிகளில் தோனி 107 ஸ்டம்பிங்குகளுடன் முதலிடம் வகித்து வருகிறார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 மூன்றையும் சேர்த்து தோனி 785 டிஸ்மிசல்கள் செய்துள்ளார், மார்க் பவுச்சர் 998, ஆடம் கில்கிறிஸ்ட் 905.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x