Published : 01 Jul 2018 09:40 AM
Last Updated : 01 Jul 2018 09:40 AM

அர்ஜென்டினா அணி வெளியேற்றம்: பிரான்ஸிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி- கிளியான் மாபே இரு கோல்கள் அடித்து அசத்தல்

கஸான்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

ரஷ்யாவின் கஸான் நகரில் நேற்று நடைபெற்றற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், பிரான்ஸ் அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. பிரான்ஸ் அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கிளியான் மாபே, பால் போக்பா அணிக்கு திரும்பினர். அதேவேளையில் அர்ஜென்டினா அணியில் கோன்சாலோ ஹிகுவெய்ன் நீக்கப்பட்டு கிறிஸ்டியன் பவோன் சேர்க்கப்பட்டார். ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கிளியான் மாபேவை, பாக்ஸ் பகுதிக்கு வெளியே அர்ஜென்டினா வீரர் ஜேவியர் மஸ்செரேனோ தள்ளிவிட்டார். இதனால் பிரான்ஸ் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் இலக்கை நோக்கி அன்டோனி கிரீஸ்மான் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

11-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் வைத்து பிரான்ஸ் வீரர் கிளியான் மாபேவை அர் ஜென்டினாவின் மார்கஸ் ரோஜோ பவுல் செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி கீரிஸ்மான் கோல் அடிக்க பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 21-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலம் பால் போக்பா, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. அடுத்த நிமிடத்தில் அர்ஜென்டினாவின் எவர் பனேகா அடித்த பந்து தடுக்கப்பட்டது.

40-வது நிமிடத்தில் அர்ஜென்டினா பதிலடி கொடுத்தது. எவர் பனேகா உதவியுடன் பந்தை பெற்ற ஏஞ்சல் டி மரியா, பாக்ஸ் பகுதிக்கு வெளியில் 35 யார்டு தூரத்தில் இருந்து வலுவாக அடித்த ஷாட், உயரமாக கர்லிங் முறையில் சுழன்றபடி கோல்கம்பத்தின் வலது ஓரமாக கோல் வலையை துளைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

48-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி 2-வது கோலை அடித்தது. எவர் பனேகாவின் கிராஸை, பிரான்ஸ் அணி சரியாக தடுக்காத நிலையில் வலதுபுறம் பாக்ஸின் வெளியே நின்ற மெஸ்ஸிக்கு சென்றது.

அதை அவர், இலக்கை நோக்கி அடித்த நிலையில் 6 அடி தூரத்தில் நின்ற கேப்ரியல் மெர்காடோ, பந்தின் வேகத்துக்கு தகுந்தவாறு தனது இடது காலால் லேசாக திருப்பி விட பந்து கோல் வலைக்குள் பாய்ந்தது. இதனால் அர்ஜென்டினா 2-1 என முன்னிலை பெற்றது. 57-வது நிமிடத்தில் பிரான்ஸ் பதிலடி கொடுத்தது. லூக்காஸ் ஹெர்னான்டெஸின் கிராஸை பெற்ற பெஞ்சமின் பவார்டு, பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல் கம்பத்தின் இடது ஓரத்தில் பாய்ந் தது. இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. அடுத்த 11 நிமிடங்களில் பிரான்ஸ் அணி மேலும் இரு கோல்கள் அடிக்க அர்ஜென்டினா அணி அதிர்ச்சியில் உறைந்தது. இந்த இரு கோல் களையும் கிளியான் மாபே 64 மற்றும் 68-வது நிமிடங்களில் அடித்திருந்தார். அர்ஜென்டினா அணியின் பலவீமான தடுப்பாட் டத்தை கிளியான் மாபே சரி யாக பயன்படுத்திக் கொள்ள பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் அர்ஜென்டினா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.

இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 3-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி உதவியுடன் பந்தை பெற்ற அர்ஜென்டினாவின் அகுரோ தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எஞ்சிய நிமிடத்தில் அர்ஜென்டினாவினால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போனது. முடிவில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x