Last Updated : 27 Jun, 2018 11:44 AM

 

Published : 27 Jun 2018 11:44 AM
Last Updated : 27 Jun 2018 11:44 AM

ஒன்று தலைக்கு நெருக்கமாக.. இன்னொன்று சைடு ஆர்ம்: இங்கிலாந்தைத் திணறடிக்க சாஹலின் புதிய பவுலிங் உத்திகள்

இந்திய ஒருநாள், டி20 போட்டிகளில் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் ரிஸ்ட் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் கூக்ளியிலேயே இரண்டு விதங்களை தற்போது கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“நான் இப்பொது இரண்டு விதமான கூக்ளிப் பந்து வீச்சுகளை கைவசம் வைத்துள்ளேன், ஒன்று தலைக்கு நெருக்கமாகக் கையைத் தூக்கி வீசுவது, இன்னொன்று சைடு ஆர்ம் அதாவது பக்கவாட்டு ஆக்‌ஷனில் வீசுவது, இவை இரண்டையும் கலந்து வீசுவேன். பேட்ஸ்மென் என் தலைப்பகுதியைக் கவனிக்க வேண்டும், இதனால் என் கையைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியும்.

ஒரு இடது கை ஸ்பின்னர் இரண்டே இரண்டு விதங்களில்தான் வீச முடியும், ஒன்று பந்தை வெளியே எடுத்துச்செல்வது இன்னொன்று உள்ளே கொண்டு வருவது, ஆனால் என் போன்ற லெக்ஸ்பின்னர்கள் 4 விதமான பந்து வீச்சு முறையைக் கடைபிடிக்க முடியும், அதனால் பேட்ஸ்மெனை எப்பவும் என்ன வீசப்போகிறேன் என்பது பற்றி யோசிக்க வைத்துக் கொண்டேயிருக்க முடியும்.

சமீபத்திய டிரெண்ட் ரிஸ்ட் ஸ்பின்னர்களே, ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இல்லையெனில் இங்கிலாந்தில் வெல்ல முடியாது என்று கூறவரவில்லை. ஆனால் அயர்லாந்தில், இங்கிலாந்தில் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு உதவும் என்றே நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 400 ரன்களெல்லாம் குவித்தது, நமக்கு எதிராகக் கடினம்.

எனக்கு இந்தத் தொடர் மிக முக்கியம், இப்போதுதான் முதல் முறையாக இங்கு வருகிறேன். லண்டனில் நேற்று வலையில் வீசிய போது வெயில் அடித்தது, துணைக்கண்டம் போல்தான் இருந்தது.

தட்பவெப்பம் இப்படியே இருந்தால் எனக்கு சவுகரியமாக இருக்கும். எதுஎப்படியிருந்தாலும் இங்கு கிரிக்கெட் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடப்போகிறேன்.

நானும் குல்தீப் யாதவ்வும் சேர்ந்து வீசும்போது விக்கெட்டுகளை வீழ்த்தவே முயற்சி செய்கிறேன். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது முக்கியம். இதுதான் எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் உத்தி” என்றார் சாஹல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x