Published : 26 Jun 2018 09:06 AM
Last Updated : 26 Jun 2018 09:06 AM

நைஜீரியாவுடன் இன்று மோதல்: நாக் அவுட் சுற்றில் நுழையுமா மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று டி பிரிவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா - நைஜீரியா அணிகள் மோதுகின்றன.

லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா, ஐஸ்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தை 1-1 என டிரா செய்திருந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் குரோஷியாவிடம் 3-0 என படுதோல்வியை சந்தித்தது. இதனால் தனது பிரிவில் ஒரு புள்ளியுடன் கடைசி இடம் வகிக் கும் அர்ஜென்டினா அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன் னேற வேண்டுமானால் இன் றைய ஆட்டத்தில் நைஜீரியாவை வீழ்த்தியாக வேண் டும் என்ற கடும் நெருக்கடியில் களமிறங்குகிறது.

அதேவேளையில் நைஜீரியா அணிக்கும் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அந்த அணி முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளதால் இன் றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு எளிதாக முன்னேறி விடும். அதேவேளையில் ஆட்டத்தை டிராவில் முடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இரு அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்பதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜென்டினா அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், ஐஸ்லாந்து - குரோஷியா அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை பொறுத்துதான் அதன் அடுத்த கட்ட சுற்றுக்கான வாய்ப்பு தெரியவரும். ஒருவேளை குரோஷியா அணியை ஐஸ்லாந்து வீழ்த்தினால் அர்ஜென்டினா அணிக்கு சிக்கல்தான். இந்த சூழ்நிலை உருவானால் அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெறும். அப்போது கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அணியே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். தற்போதைய நிலையில் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்துள்ள நிலையில் 4 கோல்கள் வாங்கி உள்ளது. அதேவேளையில் ஐஸ்லாந்து ஒரு கோல் அடித்த நிலையில் 3 கோல்கள் வாங்கி உள்ளது.

நைஜீரியா - அர்ஜென்டினா அணிகள் இதுரை 6 உலகக் கோப்பை தொடர்களில் 4 முறை மோதி உள்ளன. இதில் அனைத்திலும் அர்ஜென்டினா அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2014 உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத் தில் மெஸ்ஸி இரு கோல்கள் அடித்து வெற்றி தேடிக் கொடுத்திருந்தார். நேற்று முன்தினம் தனது 31-வயதில் காலடி எடுத்து வைத்துள்ள மெஸ்ஸி, மீண்டும் அசாத்தியமான வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும் என கருதப்படுகிறது.

ஐஸ்லாந்து அணிக்கு எதி ரான ஆட்டத்தில் மெஸ்ஸி, பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அதேவேளையில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களத்தில் இருந்த இடம் தெரியாமலே இருந்தார். தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஈக்வேடார் அணிக்கு எதிராக சாத்தியமே இல்லாத சூழ்நிலை யில் அதுவும் பின்தங்கிய நிலையில் ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினா அணியை உலகக் கோப்பைக்குள் அழைத்து வந்திருந்தார் மெஸ்ஸி. அதுபோன்ற ஒரு மேஜிக், மெஸ்ஸியின் கால்களில் இருந்து வெளிப்படும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் ஐஸ்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அணி யில் உள்ள சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவில் குரோஷியா அணி உள்ளது. இது அர்ஜென்டினா அணிக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x