Published : 24 Jun 2018 10:03 AM
Last Updated : 24 Jun 2018 10:03 AM

அடுத்த சுற்றில் கால் பதிக்கும் முனைப்பில் இங்கிலாந்து: பனாமா அணியுடன் இன்று மோதல்

ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பனாமா அணியுடன் இங்கிலாந்து அணி இன்று மோதவுள்ளது.

ரஷ்யாவின் ரெபினோ நகரிலுள்ள நிஸ்னி நோவ்கோராட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து முதல் லீக் ஆட்டத்தில் துனீசியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது. இந்த நிலையில் உலகக் கோப்பையின் அறிமுக அணியான பனாமாவைச் சந்திக்கவுள்ளது இங்கிலாந்து. முதல் ஆட்டத்தில் துனீசியாவின் பாதுகாப்பு அரண்களை எளிதாகத் தகர்த்து வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து வீரர்கள் இம்முறையும், உலகக் கோப்பையில் தவழும் குழந்தையாக அறிமுகமாகி உள்ள பனாமா அணியை எளிதில் வெற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங், ஜெஸ்ஸி லிங்கார்ட் ஆகியோர் தங்களது அபாரமான ஆட்டத்தை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பனாமாவுக்கு எதிராக அதிக கோல்களை அடிக்கும் சூழ்நிலையில் இங்கிலாந்து அணி ஜி பிரிவில் முதலிடம் பெற வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பயற்சியாளர் சவுத் கேட் கூறும்போது, “2-வது லீக் போட்டிக்காக அணி சிறந்த முறையில் தயாராகி வருகிறது. அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். சில பத்திரிகைகளில் இங்கிலாந்து அணி வீரர் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இது சரியல்ல. போட்டியின்போது யார் விளையாடுவார்கள் என்பதை கடைசி நேரத்தில் அறிவிப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x