Published : 14 Jun 2018 09:49 AM
Last Updated : 14 Jun 2018 09:49 AM

முதல் வெற்றி ரஷ்யாவுக்கு?

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து ஆட்டங்களின்போது எந்த அணி வெற்றி பெறும் என்பதை இந்த முறை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள அச்சில்ஸ் என்ற காது கேட்காத பூனை கணிக்கவுள்ளது. பூனையிடம் இரு நாட்டு அணிகள் உள்ள கிண்ணங்கள் தரப்படும். எந்தக் கிண்ணத்தை பூனை தேர்வு செய்கிறதோ அந்த அணி வெற்றி பெறுமாம். கடந்த 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பால் என்ற ஆக்டோபஸ் போட்டி முடிவுகளை சரியாக கணித்து கூறியது. அந்த ஆக்டோபஸ் கணித்தது போன்றே ஸ்பெயின் அணி பட்டம் வென்றது. 2014-ம் ஆண்டு தொடரில் ஷாகின் என்ற ஒட்டகம் எந்த அணி போட்டிகளில் வெல்லும் என ஆரூடம் கூறியது. இன்றைய ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறும் என பூனை, கணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x