Published : 13 Jun 2018 09:47 AM
Last Updated : 13 Jun 2018 09:47 AM

16 வருடங்களுக்கு பிறகு செனகல் அணி

ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 5 ஆப்பிரிக்க நாடுகளில் செனகலும் ஒன்று. உலகக் கோப்பை தகுதி சுற்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 16 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது செனகல் அணி.

2002-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய செனகல் அணி கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. அந்தத் தொடரில் லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியான பிரான்ஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது செனகல். இம்முறை ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் அந்த அணி போலந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

2002-ம் ஆண்டு அணியில் விளையாடிய அலிவு சிஸ்ஸே பயிற்சியாளராக இருப்பது அணியின் பலமாக கருதப்படுகிறது. ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் விளையாடுவதே செனகல் அணியின் பலமாகும். தகுதி சுற்றில் டி பிரிவில் இடம் பிடித்த செனகல் 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 டிராவை பதிவு செய்திருந்தது.

செனகல் அணியில் திறமையான இளம் வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் உயர்மட்ட அளவிலான ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு அதிகம் இல்லை. நட்சத்திர வீரர்களாக சடியோ மானே, காலிடுவ் கவுலிபலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் மானே, லிவர்பூல் அணிக்காகவும் காலிடுவ், நபோலி அணிக்காவும் தொழில்முறை ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். காலிடுவ், டிபன்ஸ் ஆட்டத்தில் மிக நேர்த்தியாக செயல்படும் திறன் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x