Published : 04 Jun 2018 04:48 PM
Last Updated : 04 Jun 2018 04:48 PM

பந்து கோல் வலையைத் தாக்கிய போது... - குரேஷியாவை வீழ்த்தியது குறித்து நெய்மர் நெகிழ்ச்சி

வலது பாதத்தில் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு கடும் உடல் மற்றும் கால்பந்தாட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் மீண்டும் வந்து குரேஷியாவுக்கு எதிராக கோல் அடிக்க, பிரேசில் 2-0 என்று வெற்றி பெற்றதை பிரேசில் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்,

உலகக்கோப்பைக்குத் தான் முழுதும் தயார் என்பதை ஆட்டம் தொடங்கி 23வது நிமிடத்திலேயே நெய்மர் நிரூபித்தார்.

ஆன்பீல்டில் நடைபெற்ற இந்த சர்வதேச நட்புக் கால்பந்தாட்டத்தில் இடைவேளை வரை பெரிய அளவில் பிரேசில் வீரர்களை குரேஷிய வீரர்கள் ‘மார்க்’ செய்தனர். ஆனால் பெர்னாண்டினியோவுக்குப் பதில் நெய்மர் களமிறங்கியவுடன் வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் ஆகியோருடன் இனைந்து கொஞ்சம் கலகலப்பூட்டினார், குரேஷியாவுக்குப் பிரச்சினைகள் தொடங்கின.

நெய்மர், வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் ஆகியோர் முன்களத்தில் உலகக்கோப்பை கால்பந்தில் என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறியைக் காட்டினர்.

முதல் பாதியில் பெரும்பாலும் அமைதிகாத்த பிரேசில் ரசிகர்கள் நெய்மர் களம் கண்டவுடன் பெரிய அளவுக்கு ஆரவாரத்தில் இறங்கினர்.

பிரேசில் அணியாகத் திரண்டு எழுந்து ஆடியதிலும் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது, நெய்மரின் தனிப்பட்ட திறமையிலும் பெரிய முன்னேற்றம், வேகம் தெரிந்தது.

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் பெனால்ட்டி பாக்சின் இடது ஓரத்தில் பந்தைப் பெற்ற நெய்மர் குரேஷிய தடுப்பணை வீரர்களான சிமி வ்ரசாலைகோ, டூஜே கலேட்டா-கர் ஆகியோரை அனாயசமாகக் கடைந்து கடந்து வலது காலால் வலையில் தூக்கி விட்டு கோலாக்கினார் நெய்மர்.

ஆட்டம் முடிந்து நெய்மர் கூறுகையில், “3 மாதகால கடினப்பாட்டிலிருந்து மீண்டுள்ளேன். பந்து கோல் வலையைத் தாக்க்கியபோது எனக்கு உதவி செய்தவர்களை நினைத்துக் கொண்டேன். டாக்டர் லஸ்மார், என் குடும்பம் மற்றும் நண்பர்க்ளை நினைத்துக் கொண்டேன். மீண்டும் கால்பந்தாட்டத்தில் நான்... இதற்காகத்தான் காத்திருந்தேன்.

லிவர்பூல் அணிக்கு ஆடும் பிரேசில் வீரர் ரொபர்ட்டோ பர்மினோ 2வது கோலை அடிக்க அதுவே வெற்றி கோலாக அமைந்தது.

நெய்மரின் மீள்வருகை எதிர்பார்ப்புகளையும் கடந்து விட்டது, இதனால்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது, உலகக்கோப்பையில் அவர் உச்சத்துக்குச் செல்ல வேண்டும். நெய்மரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம். ஏனெனில் அவர் வித்தியாசமான ஒரு வீரர்.

உலகக்கோப்பைக்கு முன்னதாக வரும் ஞாயிறன்று வியன்னாவில் ஆஸ்திரியாவுக்கு எதிராக இன்னொரு நட்புமுறை போட்டியில் ஆடுகிறது பிரேசில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x