Published : 24 May 2018 11:35 AM
Last Updated : 24 May 2018 11:35 AM

மோடிக்கும், தோனிக்கும் ‘சவால்’ விடுத்த விராட் கோலி

பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக மோடி பதில் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார்.

அதில் பிரதமர் மோடி மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். அவருடன் இணைந்து பணியாற்ற நாம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்று கூறி 10 முறை புல் அப்ஸ் எடுத்த வீடியோவை வெளியிட்டார்.

அதில் விராட் கோலி, நடிகர் ஹிர்திக் ரோஷன், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன். அவர்களும் இதுபோல் தங்கள் உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில் வீடியோ வெளியிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ஹிர்திக் ரோஷன், தான் தினமும் சைக்கிள் ஓட்டி பயிற்சி எடுப்பதாகக் கூறி அதனுடைய வீடியோவை வெளியிட்டார். அதேபோல, சாய்னா நேவால் தினமும் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்டார்.

கோலி ட்வீட்

virat-kohli-jpgவலுதூக்கி பயிற்சி எடுக்கும் விராட் கோலி: கோப்புப்படம்100 

அதேபோல, கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுக்கும் வீடியோவை இன்று வெளியிட்டு, அதில் ட்வீட் செய்திருந்தார்.

அதில் ’ரத்தோர் சார், உங்களின் உடற்தகுதி சவாலை ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல, நான் என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, எம்.எஸ்.தோனி ஆகியோருக்கும் இதேபோன்ற உடற்தகுதி சவாலை விடுக்கிறேன். அவர்களும் இதுபோன்று உடற்பயிற்சி செய்து வீடியோக்களை வெளியிடுவார்களா?’ எனக் கேட்டார்.

மோடி பதில்

இதற்குப் பதில் அளித்து பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் இருந்து இன்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதில், ’விராட் கோலி, உங்களின் உடற்தகுதி சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன். விரைவில் என்னுடைய உடற்தகுதி குறித்த வீடியோவை நான் ட்விட்டர் தளத்தில் பகிர்வேன்’ என மோடி பதில் அளித்துள்ளார்.

மேலும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது உடற் தகுதி குறித்த வீடியோவை வெளியிட்டு, இதேபோன்ற உடற்தகுதி குறித்த வீடியோ நடிகர் சல்மான்கான், அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா கண்டு, டிவி நடிகர் சவுமியா டான்டன் ஆகியோரும் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x