Published : 23 May 2018 05:05 PM
Last Updated : 23 May 2018 05:05 PM

சிஎஸ்கே, ஹைதராபாத் உயிரைக் கொடுத்து விளையாடின: பிளே ஆஃப் குறித்து சச்சின் உள்ளிட்டோர் ட்வீட்

140 ரன்கள் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 62/6 பிறகு 93/7 என்று உதிர்ந்து கொண்டிருந்த போது டுபிளெசிஸ் ஒரு சாதுரியமான இன்னிங்ஸைக் கட்டமைக்க சிஎஸ்கே இறுதிக்குத் தகுதி பெற்றது.

ஆட்டம் விறுவிறுவென நடைபெற்றது, இரு அணிகளுமே சவாலாக ஆடியது, இது பற்றி சச்சின், அஸ்வின் உள்ளிட்டோர் ட்விட்டரில் பாராட்டியுள்ளனர்

சச்சின் டெண்டுல்கர்: வாட் ஏ கேம்! திடீர்த் திருப்பங்களுடன் உண்மையில் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு. சென்னை அணி விட்டுக் கொடுக்கவில்லை, சன் ரைசர்ஸ் அணி உயிரைக்கொடுத்து ஆடியது. வெல் டன்.

ஆல்பி மோர்கெல்: கற்பனைத்திறமான பினிஷ் கொடுத்தார் டுபிளெசிஸ். பார்க்க மிக பிரமாதமான போட்டி.

எஸ்.பத்ரிநாத்: டி20 கிரிக்கெட்டின் சாராம்சமே எப்போது யார் பவுலிங்கை அடிக்க வேண்டும் என்பதே ஃபாப் டுபிளெசிஸ் நேற்று இதனை காண்பித்தார்.

ஜேம்ஸ் டெய்லர்: ஐபிஎல்-ன் இன்னொரு அதிசயிக்க வைத்த போட்டி, டுபிளெசிஸ் கடைசியில் அனுபவத்தைக் காட்டினார்.

மொகமத் கயீஃப்: டுபிளெசிஸிடமிருந்து என்ன ஒரு இன்னிங்ஸ்!! அனைவரும் திணறிய பிட்சில் பிரமாதம். விதிவிலக்கான இன்னிங்ஸ். ரொம்ப நல்ல வெற்றி (romba nalla victory)

அஸ்வின்: ஃபாப் டுபிளெசிஸ் நீ ஒரு சாம்பியன்.

சாம் பில்லிங்ஸ்: ஓ! இன்னொரு நம்ப முடியாத வெற்றி!!

சஞ்சய் மஞ்சுரேக்கர்: சிஎஸ்கேயின் வெற்றிக்கதை வயதைக் காட்டிலும் அனுபவத்தை ஆதரிப்பதாக உள்ளது.

முரளி விஜய்: ஒரு அணி, ஒரு திசை, ஆச்சரியகரமான ஆட்டம்.

சுரேஷ் ரெய்னா: விரல் நகங்களைக் காலி செய்யும் பினிஷ். இறுதிக்குள் நுழைந்து, எங்கு எங்கள் இடமோ அங்கு சென்றுள்ளோம்.

ஹேமங் பதானி: தோனி தலைமையில் 9 ஐபிஎல்-ல் 7வது இறுதி. எந்த ஒரு வீரரும் தன் அணியை இவ்வளவு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றதில்லை. (பார்சிலோனா கேப்டன் இனியெஸ்டாவின் சாதனை தெரியாமல் கூறுகிறார்) ஒவ்வொரு ஆண்டும் நெய்யப்பட்ட சிறப்பான மேஜிக் இது. இது சாதாரணமல்ல. ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணி சிஎஸ்கேதான்.

மேத்யூ ஹெய்டன்: நாங்கள் விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம். விசில் போடு.

ஆலன் டோனல்ட்: டுபிளெசிஸ் தனது உயர்தரம் மற்றும் அனுபவத்தை காட்டினார். நெருக்கடியில் அவர் காட்டிய நிதானம் பெரியது. இறுதிப்போட்டிக்குள் நுழைவது எப்படி என்று அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x