Published : 23 May 2018 04:53 PM
Last Updated : 23 May 2018 04:53 PM

சாம் பில்லிங்ஸ் காயம் டுபிளெசிஸுக்கு வழிவிட்டது: ஸ்டீபன் பிளெமிங்

சாம் பில்லிங்ஸ் காயம் அடைந்த காரணத்தால் டுபிளெசிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே நடந்த இறுதி போட்டிக்கு நுழைபவர்களுக்கான ஆட்டத்தில் சன்ரைசர் நிரணயித்த 140 இலக்கை அடைய சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்டார் வீரர்கள் சற்று தடுமாறி போய்விட, தொடக்க வீரராக களமிறங்கிய டுபிளெசிஸ் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சென்னை அணி இறுதி போட்டியில் நுழைய முக்கிய காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியதற்காக . டுபிளெசிஸிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த சில போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டுபிளெசிஸ் விளையாடாமல் இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்கு எதிராக அவர் களமிறக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி போட்டி துவங்குவதற்கு முன் அனைவரிடமும் இருந்தது. எனினும் அனைவரின் கேள்விக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலை டுபிளெசிஸ் அளித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் கூறும்போது,

“சாம் பில்லிங்ஸ் பஞ்சாப் உடனான போட்டியின்போது காயம் அடைந்தார். சாம் பில்லிங்கிஸின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் தொடர்ந்து இப்போட்டியில் பங்கேற்க எண்ணியிருந்தால் அவர் கடினமாக உணர்ந்திருப்பார். இதனால் அந்த வாய்ப்பை நாங்கள் டுபிளெசிஸிஸ்குக்கு வழங்கினோம். நாங்க இந்த முறை வித்தியாசமான காம்பினேஷனை உபயோகித்தோம். டுபிளெசிஸியின் திறமை, மனப்பக்குவம்  மற்றும் இந்த போட்டியில் அவரது பங்களிப்பு ஆகியவை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சில நேரத்தில் இதனை அதிஷ்டம் என்று கூறலாம்.  நீங்கள் சரியான நேரத்தில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவர் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை விளையாடினால் எவ்வாறு இருக்குமோ அதுதான் நேற்றைய போட்டியிலும் நடந்தது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x