Published : 22 May 2018 03:26 PM
Last Updated : 22 May 2018 03:26 PM

இன்று நடக்கும், சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் முதல் ‘ப்ளே-ஆஃப்’ போட்டி ரத்தானால் யாருக்கு பைனல் வாய்ப்பு?

மும்பையில் இன்று இரவு நடக்கும் ப்ளே-ஆஃப் தகுதிச் சுற்றுப்போட்டி ரத்தானால், எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்று தெரியவந்துள்ளது.

ஐபிஎல் 11-வது சீஸன் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் ப்ளே ஆஃப் சுற்றுப்போட்டி தொடங்குகின்றன. 18 புள்ளிகளுடன் சன் சைரசர்ஸ் ஹைதராபாத் அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 18 புள்ளிகள் பெற்றாலும் கூட நிகர ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி முதலிடத்தைப் பெற்றது.

இன்றைய முதலாவது ப்ளேஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மோதுகிறது. 2-வது ப்ளேஆப் சுற்றுப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதலாவது தகுதிச் சுற்றுப்போட்டி மழை காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திலோ அல்லது ரசிகர்களின் இடையூறு காரணாமாக போட்டி ரத்து செய்யப்பட்டால், மீண்டும் போட்டி நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் சரிசமமான புள்ளிகளும் தரப்படாது. மாறாக, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி அதாவது, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

மாறாக போட்டி ரத்து செய்யப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2-வது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டிய சூழல் ஏற்படும். இதில் வெற்றி பெற்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும்.

ஒருவேளை எந்தவிதமான இடையூறும் இன்றைய போட்டியில் நேராமல் போட்டி நடந்தால், சன்ரைசர்ஸ் அணியை வென்று நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறலாம். அல்லது தோல்வி அடையும் பட்சத்தில் 2-வது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக தகுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும். போட்டி ரத்தானாலும், அல்லது இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், மற்றொரு போட்டியை சென்னை அணி சந்திக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x