Published : 18 May 2018 07:15 AM
Last Updated : 18 May 2018 07:15 AM

செய்தித்துளிகள்: வார்னருக்கு அனுமதி

கொரியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர், வந்தனா கட்டாரியா, லால்ரெம்ஷியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி ஜப்பானையும், சீனாவையும் வீழ்த்தியிருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பதால் ஆட்டம் ஒருதரப்புக்கு சாதமாக அமைவதை தடுக்கும் வகையில் டாஸ் போடாமலேயே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியே முதலில் பேட் செய்வதா, பீல்டிங் செய்வதா என்பதை முடிவு செய்ய ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

உலகக் கோப்பை தொடருக்கான ஜெர்மனியின் உத்தேச அணியில் இடம் கிடைக்காததால் ஸ்ரைடிக்கர் சான்ட்ரோ வாக்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ளஹீரோ இன்டர்கான்டிநென்டல் கோப்பைக்கான தேசிய கால்பந்து பயிற்சி முகாமில் சென்னையை சேர்ந்த தனபால் கனேஷுக்கு பதிலாக வினீத் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். டைபாய்டு காய்ச்சலால் தனபால் கணேஷ் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் இந்த முகாமில் கலந்து கொள்ள முடியவில்லை.

கேப்டவுன் டெஸ்ட்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 12 மாதங்கள் தடைபெற்றுள்ள டேவிட் வார்னர், சிட்னி கிரிக்கெட் கிளப்புக்காக விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூவென்டஸ் கிளப் அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடி வந்த கோல்கீப்பரான 40 வயதான இத்தாலியை சேர்ந்த கியான்லிகி பஃப்பான் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x