Published : 16 May 2018 07:04 PM
Last Updated : 16 May 2018 07:04 PM

தோனியின் தன்னம்பிக்கை எங்களுக்கு நல்லது ஆனால் ‘டெத்’ பவுலருக்கு அபாயம்: ஸ்டீபன் பிளெமிங்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி உணர்ச்சிப்பூர்வமாக தன் தீவிரத்தைக் காட்டி ஆடிவருகிறார். களவியூகமாகட்டும் பந்து வீச்சு மாற்றமாகட்டும் தோனி முன் யோசனையுடன் தன் அனுபவத்தைக் காட்டி வருகிறார், உத்திகளை விட பேட்டிங், கேப்டன்சி இரண்டிலுமே தோனி காட்டி வரும் தீவிரம், முனைப்பு குறித்து தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் புகழ்ந்து கூறியுள்ளார்.

“மனரீதியாக தீவிரமாக உள்ளார், தொடருக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே அவர் பயிற்சியில் ஈடுபடத்தொடங்கி விட்டார். நாங்களெல்லாம் வருவதற்கு முன்பாகவே அவர் வந்து விடுவார், ஏகப்பட்ட பந்துகளை அடித்து பயிற்சி மேற்கொள்வார். பெரிய அளவில் பந்துகளை எதிர்கொண்டு ஆடிப் பயிற்சி மேற்கொள்வார். அவர் தன் முனைப்பில் கவனம் செலுத்துபவர்.

சிங்கிள்கள் எடுக்கும் போது அவர் முனைப்புக் குறைவாகவே இருக்கும், ஆனால் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கிய பிறகு அவர் 100% கடப்பாட்டுடன் ஆடுவார்.

இப்போதெல்லாம் தொடக்கத்திலேயே பாசிட்டிவ் முனைப்பு காட்டுகிறார். அவரது கால்நகர்த்தல்கள் பாசிட்டிவாக உள்ளன. அவரது பினிஷிங் திறன் மீண்டும் அவரிடமே வந்து சேர்ந்துள்ளது. இது பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது, இந்த இடத்துக்கு வருவதற்கு அவர் கடினமக உழைத்துள்ளார். அவரை இதற்காக நான் பாராட்டியே தீருவேன்.

இப்போது சிந்தனைத் தெளிவில் அவர் இளமையாக இருந்த போது ஆடும் ஆட்டமெல்லாம் கூட அவருக்கு சாத்தியமாகிறது. ஒரு கட்டத்தில் அவருக்கு எதிரான பந்து வீச்சு உத்தியை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் இப்போது அவர் தன் சாதுரியத்தின் மூலம் அவற்றை முறியடிக்கிறார். அவரது உத்தி வலுவடைந்துள்ளது.

தான் என்ன செய்கிறோம் என்பதில் நம்ப முடியாத அளவுக்கு அவரிடம் தன்னம்பிக்கை பீறிடுகிறது. இது எப்போதும் எங்களுக்கு நல்லது ஆனால் டெத்ஓவர் பவுலருக்கு அபாயமானதே” என்றார் ஸ்டீபன் பிளெமிங்.

சிஎஸ்கே அடுத்ததாக மே 18ம் தேதி டெல்லி டேர் டெவில்ஸ் அணியுடன் விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x