Published : 14 May 2018 07:22 PM
Last Updated : 14 May 2018 07:22 PM

ஐபிஎல் 2018: நெட் ரன் ரேட் விவகாரம் இல்லாமலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெற முடியும்

ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் போட்டிகள் அதன் இறுதிக் கட்டத்தை சிறிது சிறிதாக நெருங்கி வரும் நிலையிலும் சன் ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் நீங்கலாக மற்ற அணிகளுக்கிடையே பிளே ஆஃப் வாய்ப்பில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் டெல்லி அணி கதை முடிந்து விட்டது. ஆனால் மற்ற அணிகளில் 7வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணிக்கும் பிளே ஆஃப் சுற்றில் தகுதி பெற வாய்ப்புள்ளது. விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி பல அதிரடி, சரவெடி வீரர்களைக் கொண்டு வலுவாக இருந்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அணித்தேர்வு, களவியூகம், பந்து வீச்சு மாற்றம் என்று இந்திய அணித்தலைவர் விராட் கோலி கடும் குழப்பத்தில் இருப்பது தோல்விகளில் எதிரொலித்து வருகிறது.

தற்போது 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் உள்ள ஆர்சிபியின் நிகர ரன் விகிதம் -0.261.

இந்நிலையில் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் ஆர்சிபி வென்று 14 புள்ளிகளைப் பெற்று விட்டால், மற்ற ஆட்டத்தின் முடிவுகளும் அனுகூலமாக அமைந்தால் ஆர்சிபி அணி நெட் ரன் ரேட் கவலையில்லாமலேயே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

இன்று கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டி ஆர்சிபி அணி மட்டுமல்லாது மற்ற அணிகளுக்கும் மிக மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் 12 புள்ளிகளில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் போட்டியும் மிக முக்கியமானது, இந்தப் போட்டி முடிந்த பிறகு பிளே ஆஃப் பற்றிய தெளிவான சித்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x