Published : 14 May 2018 03:05 PM
Last Updated : 14 May 2018 03:05 PM

தோனி, வாட்சன், ரெய்னா வலுவாக உள்ளனர், ஆனால்.. ராயுடுதான் வழிகாட்டி: ஸ்டீபன் பிளெமிங் புகழாரம்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை சிறிது காலம் தன் வசம் வைத்திருந்த ராயுடு மிகவும் நேர்மைத்திறத்துடன் ஆடி வருகிறார், 535 ரன்களை எடுத்து பட்டியலில் 4வதாக உள்ளார்.

நேற்று 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக்த் திகழ்ந்தார். ஆனால் இதுவரை சிறப்பாக வீசி வந்த சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் நேற்று என் அவ்வளவு புல்டாஸ்களை வீசினார் என்பது புரியாத புதிர். கேன் வில்லியம்சனின் தொடக்க களவியூகம் சரியாக இல்லை. நேரான இடங்களிலெல்லாம் ஆட்களை நிறுத்தாமல் வைடாக நிறுத்தியதால் சில பவுண்டரிகள் சென்றதையும் மறுப்பதற்கில்லை.

ஆனாலும் ராயுடு இந்த ஐபிஎல்-ல் சதம் எடுக்கத் தகுதியானவர்தான் அது நேற்று அவருக்குக் கைகூடியது, இந்த ஐபிஎல் தொடரில் சென்னையின் வெற்றிக்கு பெரிதளவு பங்கு செலுத்துபவர் ராயுடுதான்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

அட்டவணையில் டாப் இடத்துக்கு அருகில் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் ராயுடுதான்.

ரன் அட்டவணையில் அவர் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமில்லை, ஆனால் அவர் அந்த ரன்களை எடுத்த விதம் அதைவிட ஆச்சரியமானது. பாசிட்டிவாக ஆடுகிறார், மற்றவர்கள் மீது வெகுவிரைவில் தாக்கன் செலுத்துபவராக உள்ளது அவரது ஆட்டம்.

ஐபிஎல்-ஐ வெல்ல வேண்டுமென்றால் டாப் ஆர்டரில் அவரைப்போல் ஓரிவு வீரர்கள் அவசியம். இப்போதைக்கு ராயுடு இதனைச் செய்து வருகிறார். மற்றவீரர்களில் ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி, ஆகியோர் வலுவாக பங்களிப்பு செய்கின்றனர், ஆனால் கண்டிப்பாக இந்த விஷயத்தில் ராயுடு ஒரு முன்னணி வழிகாட்டியாக உள்ளார்.

இவருடைய பார்ம் தொடர வேண்டும், அவர் கூடவே மற்றவர்களும் செல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினார் பிளெமிங்.

ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் நடப்பு ஐபிஎல் வரை 8 சீசன்களில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x