Last Updated : 10 May, 2018 08:41 PM

 

Published : 10 May 2018 08:41 PM
Last Updated : 10 May 2018 08:41 PM

‘ரெய்னாவை ஓரம் கட்டிய ரோகித் சர்மா’; டி20 போட்டிகளில் மைல்கல்: சில சுவாரஸ்யத் தகவல்கள்

கொல்கத்தாவில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்ட சில சாதனைகளைச் செய்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டக்கில் கொல்கத்தா அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 31 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 747 ரன்கள் சேர்த்த முதல் வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 746 ரன்கள் சேர்த்தே சாதனையாக இருந்தது.

இவர்களுக்கு அடுத்த அடத்தில், விராட் கோலி 490 ரன்களுடனும், கெயில் 594, டேவிட் வார்னர் 677 ரன்கள், தோனி 455, ஷிகார் தவாண் 459 ரன்கள் என வரிசையில் உள்ளனர்.

சில சுவாரஸ்யத் தகவல்கள்….

1. தோனி, கம்பீர், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்ததாக டி20 போட்டிகளில் 100 போட்டிகளுக்கு கேப்டன் செய்த பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றார்.

2. மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷான் அரை சதம் அடிக்க 17 பந்துகள் எடுத்துக்கொண்டார். இதுதான் அந்த அணியின் வீரர் ஒருவர் அரை சதம் அடிக்க எடுத்துக்கொண்ட குறைந்தபட்ச பந்துகளாகும்.

3. இஷான் கிஷான் தான் சேர்த்த 62 ரன்களில் 56 ரன்கள் பவுண்டரிகள் மூலமே சேர்த்துள்ளார். இதற்கு ரெய்னா, கே.எல் ராகுல் ஆகியோர் மட்டுமே இதுபோன்று 50 ரன்களுக்கு மேல் பவுண்டரிகளாகச் சேர்த்திருந்தனர்.

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது.

5. கொல்கத்தா அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்ததே இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

6. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x