Published : 29 Apr 2018 08:47 AM
Last Updated : 29 Apr 2018 08:47 AM

ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு தடை போடும் முனைப்பில் ராஜஸ்தான்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளை யாடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளைப் பெற் றுள்ளது.

கடைசி 2 ஆட்டங்களில் குறைந்த அளவு ஸ்கோரை எட்டியபோதிலும் தனது திறமையான பவுலிங்கால் ஹைதராபாத் அணி அபார வெற்றி கண்டது. அணியின் நட்சத்திர பவுலர் புவனேஸ்வர் குமார் இல்லாதபோதிலும் ரஷித் கான், சித்தார்த் கவுல், பசில் தம்பி, சந்தீப் சர்மா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி எதிரணியை மிரளச் செய்தனர்.

குறிப்பாக ரஷித் கான், அனைத்து அணி வீரர்களையும் இந்தத் தொடரில் மிரட்டி வருகிறார். அவரது அபாரமான லெக் ஸ்பின்னுக்கு பெரும்பாலான ஆட்டக்காரர் மிரள்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

அதே நேரத்தில் ஹைதரபாத் அணியின் பேட்டிங் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. கடந்த 2 ஆட்டங்களில் அந்த அணியின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. கேப்டன் கேன் வில்லியம்ஸன் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடமிருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவாண் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அந்த அணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு எளிதாகிவிடும். மணீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத் அணி யின் வெற்றி வேகத்துக்கு தடை போடும் முனைப்பில் ராஜஸ் தான் களமிறங்கவுள்ளது.

மும்பையுடன் ராஜஸ்தான் மோதிய கடைசி லீக் ஆட்டத்தில், அந்த அணியின் ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் கிருஷ்ணப்பா கவுதம் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அதேபோல பவுலிங்கிலும் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், பென் லாலின், தவால் குல்கர்னி, ஜெய் தேவ் உனத்கட் ஆகியோர் பரிமளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x