Last Updated : 28 Apr, 2018 07:54 PM

 

Published : 28 Apr 2018 07:54 PM
Last Updated : 28 Apr 2018 07:54 PM

ஐபிஎல் போட்டி: ‘சென்ட் ஆப்’ செய்த ஷிவம் மவி, ஆவேஷ் கானுக்கு எச்சரிக்கை

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஷிவம் மவி, டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ஆவேஷ் கான் ஆகியோர் எதிரணி வீரர்களை சென்ட் ஆஃப் செய்து, களத்தில் தவறான நடத்தையை வெளிப்படுத்தியதால், அவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் நடந்தது. இதில் கொல்கத்தா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி பெற்றது.

இதில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஷிவம் 4 ஓவர்கள் வீசி 58 ரன்கள் வாரி வழங்கினார். இவர் டெல்லி வீரர் காலின்முன்ரோவை ஆட்டமிழக்கச் செய்து அவரைத் பார்த்து வெளியே போ என்று சைகையில் ‘சென்ட் ஆப்’செய்தார். இது கேமிராவில் பதிவானது.

அதேபோல, கொல்கத்தா அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல் ஆட்டமிழந்தவுடன் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான், சைகையால் வெளியே போ என்று ‘சென்ட் ஆப்’ செய்தார். இதைப் பார்த்த ரஸல் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டுவிட்டார் அதன்பின், அவரிடம் ஓடிச் சென்ற ஆவேஷ் கான் மன்னிப்பும் கேட்டார். இந்த காட்சிகளும் கேமிராவில் பதிவானது.

இதையடுத்து, இரு வீரரும் ஐசிசி வீரர்கள் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளில் லெவன்-1 தவறைச் செய்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இருவரும் முதல்முறையாக இதுபோன்ற தவறை செய்ததால், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்புவது என ஐசிசி போட்டி நடுவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஷிவம் மவி, ஆவேஷ் கான் ஆகியோருக்கு அபராதமும் விதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x