Published : 26 Apr 2018 08:48 AM
Last Updated : 26 Apr 2018 08:48 AM

பினிஷர் வேலை ஆட்டத்தை முடிப்பது அனுபவத்தை பகிர்வது: வெற்றிக்குப் பிறகு தோனி கூல்

ஆர்சிபி அணிக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டுமொருமுறை நிலைநாட்டியது. தோனி 34 பந்துகளில் 70 ரன்கள், 7 சிக்சர்கள் என்று தாண்டவமாடியதோடு, ராயுடுவுடன் இணைந்து 101 ரன்கள் கூட்டணி அமைத்து விரட்டலை அபாரமாகத் திட்டமிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற தோனி கூறியதாவது:

ஏ.பி.டிவில்லியர்ஸ் அடியில் ஆர்சிபி 200 ரன்களுக்கும் மேல் சென்ற போது நான் விரட்டல் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். 15-20 ரன்கள் அதிகம்தான்.

தொடக்கத்தில் முக்கிய பேட்ஸ்மென்களை இழந்தோம். ஆனால் இது சிறிய மைதானம், பந்துகள் பறக்கின்றன. மொத்தத்தில் திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தன. ஆனால் நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை இருந்தாலும் நன்றாகவே நடந்தன.

இது சற்றே மந்தமான பிட்ச்தான். ஏ.பி.டிவில்லியர்ஸ் இன்னிங்ஸ் சிற்ப்பு வகையைச் சேர்ந்தது. தரமான ஸ்பின்னர்களுக்கு எதிராக டிவில்லியர்ஸ் ரன் வேகத்தைக் கூட்டியது அபாரம்.

அனைவரும் பங்களிக்கின்றனர், நாங்கள் பெரிய இலக்குகளை விரட்டுகிறோம். தாக்கூர் நன்றாக வீசுகிறார், முதலில் கொஞ்சம் வாங்கினார். இலக்கை விரட்டும் போது எதிரணியின் எந்த பவுலர்களுக்கு ஓவர்கள் மீதமிருக்கின்றன, இதில் கேப்டன் யாரைக் கொண்டு வருவார் என்று எதிர்நோக்கி அதற்குத் தக்கவாறு விளையாட வேண்டும்.

நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை தோற்போம் ஆனால் பினிஷர் வேலை பணியை முடிப்பதே, பிறருக்கு உதவுவதே, அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதே ஏனெனில் நான் பேட்டிங் இறங்க வேண்டிய தேவையே கூட இருக்காது. விரட்டலில் 2-3 பந்துகள் மீதம் வைத்தது விநோதம்தான்.

இந்த வரிசையில் ராயுடு மிக முக்கியமானவர். ரன்களை விரைவில் எடுத்து ஸ்கோர்போரடை நகர்த்துபவர் அவரே. சிறிய மைதானம் அவருக்கு வாகாக அமைந்தது. பெரிய மைதானங்களில் அவர் இதே ஷாட்டை ஆடும்போது கொஞ்சம் அவர் தடுமாறிவிடுகிறார்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x