Last Updated : 15 Apr, 2018 05:07 PM

 

Published : 15 Apr 2018 05:07 PM
Last Updated : 15 Apr 2018 05:07 PM

தினேஷ் கார்த்திக்கை துரத்தும் தோல்வி: டெல்லி அணியை நாளை வீழ்த்துமா? கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளால், துவண்டுள்ள நிலையில், நாளை நடக்கும் போட்டியில் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு அணியை மட்டுமே வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளுடான போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.

அதேபோல டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியிடமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டக்வொர்த் விதிப்படியும் தோல்வியைச் சந்தித்தது. ஆனால்,நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று எழுச்சியுடன் உள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல இந்த போட்டி இது முக்கியமானதாகும். டெல்லி அணி வீரர் முகமது ஷமிக்கு சொந்த மாநிலம் கொல்கத்தா என்பதால், நாளை அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டியநிலையில் இருக்கிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தைப் பொறுத்தவரை, இதற்கு முன் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீருக்கு மைதானம், ஆடுகளம் குறித்து நன்கு தெரியும். மேலும், கடந்த கால வரலாற்றில் கொல்கத்தா அணியுடன் இங்கு விளையாடிய 12 போட்டிகளில் 8 போட்டிகளில் டெல்லி அணி தோல்வி கண்டுள்ளது. ஆதலால், இந்த முறை டெல்லி அணிக்கு தலைமை ஏற்று இருக்கும் கம்பீர் ஆடுகளம், மைதானத்தின் தன்மை குறித்து அறிந்து அணியை வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

டெல்லி அணியில் காலின் முன்ரோ, ஜேஸன் ராய் ஆகியோர் கடந்த போட்டியில் நிலைத்து ஆடி அணிக்கு வெற்றிதேடித் தந்தனர். இன்னும் கேப்டன் கம்பீர் பேட்டிங்கில் முழுமையான ஃபார்முக்கு திரும்பவில்லை. கடந்த 3 போட்டிகளிலும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பவில்லை என்பதால், இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அதேசமயம், கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, பேட்டிங் வரிசையில் தினேஷ் கார்த்திக் கடந்த போட்டியில் செய்த மாற்றம் தோல்வியில் முடிந்தது. தொடக்க வீரராக தூள்கிளப்பி வந்த நரேனை நடுவரிசையில் இறக்கியது எடுபடவில்லை.

மேலும், 19வயதுக்குட்டபோருக்கான அணியில் இடம் பெற்றிருந்த சுப்மான் கில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடக் கூடியவர். அவரை 7-வது வீரராக நெருக்கடியில் களமிறக்கியபோது, அவரால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதைபோலவே பந்துவீச்சாளர் சிவம் மவியை பவர்ப்ளே ஓவரில் ப யன்படுத்தி இருக்க வேண்டும். அதைவிடுத்து மற்ற ஓவர்களில் பயன்படுத்தி தவறு செய்துவிட்டார் கார்த்தி.

இந்த இரு வீரர்களுக்கும் தங்களின் திறமையை நிரூபிக்க போதுமான அவகாசம் அளிக்காமல் இருந்துவி்ட்டார் கார்த்தி. ஆதலால், இந்த போட்டியில் இருவரையும் உரிய முறையில் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், கொல்கத்தா அணியில் முக்கிய வீரராக கருதப்படும் ராபின் உத்தப்பா இதுவரை 3போட்டிகளிலும் 50 ரன்களைக்கூட தாண்டவில்லை. ஆதலால், இன்றைய போட்டியில் நிலைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கடுமையான அழுத்தத்துக்கும், வெற்றிக்கட்டாயத்திலும் இரு அணிகளும் இருப்பதால், வெற்றிக்காக கம்பீர் தலைமையும், தினேஷ் கார்த்திக் தலைமையும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். இதில் ஒருவர் வெறும் வெற்றிஅணிக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்துஅடுத்த கட்டத்துக்கு எடுத்தும் செல்லும் என்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x