Published : 30 Mar 2018 03:25 PM
Last Updated : 30 Mar 2018 03:25 PM

கண்ணீர் விட்ட தோனி: தண்ணீர் கொடுத்து ஆற்றிய சுரேஷ் ரெய்னா: சென்னையில் நெகிழ்ச்சி

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாட வந்துள்ளதை நினைத்து கேப்டன் எம்எஸ் தோனி கண்ணீர் விட்டு நெகழ்ச்சி அடைந்தார். உடனடியாக சுரேஷ் ரெய்னா தண்ணீர் கொடுத்து அவரை ஆற்றுப்படுத்தினார்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைக்கு பின் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வந்துள்ளது. ஏலத்தில் கலந்து கொண்டு புதிய வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஏற்கனவே இருந்த ரவிந்திர ஜடேஜா, ரெய்னா, தோனி, பிராவோ ஆகியவீரரக்ளைத் தவிர ஏராளமானோர் புதிய வீரர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக சிஎஸ்கே அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசினார்.

அப்போது அவர், கடந்த 2 ஆண்டு தடைக்கு பின் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்துள்ளதை நினைத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். அதேசமயம் கடந்த 2ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இல்லாததை நினைத்து நாதழுதழுக்க பேசி கண்ணீர் விட்டார். கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்துவிடுவோம் என்று கூறியபோது கண்ணீர்விட்ட தோனி, எதிர்காலத்தை நோக்கி வெற்றியுடன் நடைபோட வேண்டும் என்றார்.

இன்று முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியையும், புன்னகையும் தெரிகிறது. நமக்கு அடுத்து முக்கியமானது, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான். சிஎஸ்கே திரும்பி வந்துவிட்டது, நாம் திரும்வந்துட்டோம், வந்துட்டோம் என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

இதையடுத்து, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சுரேஷ் ரெய்னா தண்ணீர் கொண்டுவந்து தோனிக்கு கொடுத்து அவரை ஆற்றுப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் தனது பயணத்தை தொடங்கிய தோனி 10 ஆண்டாக பயணிக்கிறார். இடையில் 2 ஆண்டுகள் இடைவெளி மட்டுமே இருந்தது. 159 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 3561 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 37.88 ரன்களும், அதிகபட்சமாக 70 ரன்கள் நாட்அவுட் என்ற நிலையிலும் தொடர்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x