Last Updated : 26 Mar, 2018 07:43 PM

 

Published : 26 Mar 2018 07:43 PM
Last Updated : 26 Mar 2018 07:43 PM

ஸ்மித், வார்னர் ஐபிஎல் போட்டியில் இல்லாவிட்டால் மிகப்பெரிய சோகமாகும்: ஆஷிஷ் நெஹ்ரா வேதனை

 

ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் விளையாடாமல் இருந்தால்,அது மிகப்பெரிய சோகமாகும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா வேதனை தெரிவித்துள்ளார்.

கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவியும், டேவிட் வார்னரின்த துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.

இதில் ஸ்மித் ஒருபோட்டியில் விளையாட தடையும், 100 சதவீதம் அபராதமும், வார்னருக்கு ஒருபோட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்தி சிக்கிய பான்கிராப்டுக்கு 75 சதவீதம் ஊதியம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் ஸ்மித்தின் ஒட்டுமொத்த மரியாதையையும் சிதைத்துவிட்டது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் அந்த அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டேவிட் வார்னரும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவீரர்களும் நெருக்கடியான மனநிலையில் இருப்பதால், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்களா என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா டெல்லியில் நிருபர்களுக்கு வார்னர், ஸ்மித் குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

ஸ்மித், வார்னர் செய்தது தவறுதான் இல்லையென கூறவில்லை. பந்தை சேதப்படுத்தும் தவறை இருவரும் முதல்முறையாக செய்கிறார்கள் என்று கூறினால்கூட அதுவும் தவறுதான். அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர், அவர்களுக்கு ஐசிசியும் தண்டனை கொடுத்துவிட்டது.

உண்மையாகவே, நமக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியாது. ஆனால், ஸ்மித்தும், டேவிட் வார்னருக்கும் வாழ்நாள் தடை விதித்து, அவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் அணியில் விளையாமல் போனால், அது மிகப்பெரிய இழப்புதான். இருவரும் மிகச்சிறந்த வீரர்கள், இருவரும் இல்லாத ஐபிஎல் போட்டி மிகப்பெரிய சோகமாகும்.

பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ்  ஸ்விங் வீசுவது என்பது மிகப்பெரிய கலை. அதேசமயம், திருட்டுகூட ஒரு கலைதான். திருடியதற்காக ஒருவரை பிடித்து சிறையில் அடைத்தபின் அவரை புகழ்வோமா? ரிசர்வ் ஸ்விங் ஒரு கலை,ஆனால், பந்தை சேதப்படுத்துதல் என்பது நேர்மையற்றதாகும்.

ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு பந்துவீச்சாளர் நன்கு தயாராக வேண்டும், பந்தையும் சேதப்படுத்தாமல், வீச வேண்டும். டி20, ஒருநாள் போட்டிகளில் வெள்ளைப்பந்துகளில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வது கடினம். அதிலும் ஒருநாள் போட்டிகளில் இரு புதிய வெள்ளைப்பந்துகள் பயன்படுத்தப்படும் போது ரிவர்ஸ் ஸ்விங் என்பது மிகக்குறைவுதான். டெஸ்ட் போட்டியில் மட்டுமே அது சாத்தியம்.

அதிலும் சூழல், ஆடுகளத்தின் தன்மை ரிவர்ஸ் ஸ்விங்கின் போடுவதில் முக்கியப்பங்காற்றும். ஆடுகளம் மிகவும் வறண்டதாகவும், கோடுகள் நிறைந்திருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் எளிதாக முடியும். உதாரணமாக, டெல்லி பெரோஷ்கோட்லா மைதானத்தில், முதல் 10 ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் வரும்.

இவ்வாறு ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x