Published : 07 Mar 2018 01:43 PM
Last Updated : 07 Mar 2018 01:43 PM

தாயகம் திரும்பிய கவுதம் கம்பீருக்கு புதிய பொறுப்பு: டெல்லி டேர் டெவில்ஸ் அணி கேப்டனாக நியமனம்

2018 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து தாயகம் திரும்பிய கவுதம் கம்பீர் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி உரிமையாளர் கவுதம் கம்பீரை ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

இதனைப் பெரிய கவுரவமாகக் கருதும் கம்பீர், “இந்தப் பொறுப்பு எனக்குக் கிடைத்தது, டெல்லி நகருக்கு நான் கிரிக்கெட் மூலமாகத் திருப்பி அளிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. இப்போது நான் உறுதியாக நம்புகிறேன் இந்த அணியில் உள்ள வீரர்கள் இந்த அணியை ஒரு சிறந்த அணியாக உருவாக்குவார்கள் என்று.

இப்போதைய அணியின் வீரர்களின் ஆற்றல் அபரிமிதமானது. இந்த ஆற்றலை சீரான ஆட்டத்திறனாக மாற்ற வேண்டியது என் பொறுப்பில் உள்ளது, மிகப்பெரிய சாம்பியனான ரிக்கி பாண்டிங்குடன் பணியாற்றுவது மிகப்பெரிய விஷயமாகும்” என்றார்.

கவுதம் கம்பீர் பற்றி பாண்டிங் கூறும்போது, “கவுதி ஒரு தலைவராக நீண்ட காலமாகவே திகழ்ந்து வருகிறார். முந்தைய ஐபிஎல் அணியில் அவர் ஒரு டாப் லீடராக தன்னை நிரூபித்துள்ளார். அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை, ஆனால் வெளியில் தெரியும் தன்னம்பிக்கைக்கு பின்னால் உள்ள அவரது வேட்கை அணியின் பிற வீரர்களுக்கு அகத்தூண்டுகோலாக அமையும். ஓய்வறை மரியாதையை பெற்றவர். உரிமையாளரும் கவுதியை கேப்டனாக்கியதில் பெருமை கொள்கிறார்” என்றார் பாண்டிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கம்பீர் தலைமையில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x